பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: கருணாநிதியின் வழியை பின்பற்றணும்!

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (70)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தி.மு.க., 10 ஆண்டுகளாக, பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது, நாம் அறிந்ததே. தற்போது ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற நாள் முதல், அவரின் அணுகுமுறையில் மிகப்பெரிய
கருணாநிதி, வழி, பின்பற்றணும்,ஸ்டாலின்,பிரதமர், மோடி


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தி.மு.க., 10 ஆண்டுகளாக, பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது, நாம் அறிந்ததே. தற்போது ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற நாள் முதல், அவரின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை அனைவரும் பார்த்து வருகிறோம்.

தேர்தலுக்கு முன், மத்திய அரசின் மீது காட்டிய எதிர்ப்பு அனைத்தையும் ஒதுக்கி, அவரின் தந்தை வழியில், மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல முடிவு செய்து விட்டார்; இது நல்ல மாற்றம்.இதனால், நம் மாநிலத்திற்கு தேவையானவற்றை மத்திய அரசிடம் உரிமையுடன் கேட்டு பெற இயலும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர், மத்திய அரசுக்கு எதிராக, 'சண்டை கோழி'களாக செயல்படுகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட போவது, அந்தந்த மாநில மக்களே.ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போன்றோர், மத்திய அரசுடன் சற்றே இணக்கமாக செயல்பட்டு, தங்கள் மாநிலத்திற்கு தேவையானவற்றை பெற்று கொள்கின்றனர்.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தேர்தலின் போது மட்டும் தான், பா.ஜ., உடன் மோதலில் ஈடுபடுகிறார். மற்ற நேரங்களில், மாநில நலன் கருதி மத்திய அரசுடன் அரசியல் மோதலில் ஈடுபடாமல் இருக்கிறார்.


latest tamil news


முதல்வர் ஸ்டாலினும், மம்தா மற்றும் கெஜ்ரிவால் போல சண்டை கோழியாக இல்லாமல், தமிழக நலன் கருதி ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் போல செயல்பட வேண்டும்.தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பங்கு வகித்து, மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்ததை, அவரது மகன் ஸ்டாலின் மறந்திருக்க மாட்டார்.பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நிச்சயம் பயனளிக்கும் வகையில் இருந்திருக்கும்.எது எப்படியோ... முதல்வர் ஸ்டாலின், அவரின் தந்தை வழியில் மத்திய அரசுடன் இணக்கமாக சென்று, தமிழகத்தின் மேம்பாட்டிற்கு உதவுவார் என நம்புகிறோம்.


Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூன்-202121:37:19 IST Report Abuse
j Karthikeyan தினமலர் இதுபோன்ற ஆரோக்கியமான செய்திகளை வெளியிடுவது மகிழ்ச்சி மாற்றம் தொடரட்டும் வாழ்த்துக்கள் தினமலர்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-ஜூன்-202120:49:26 IST Report Abuse
Ramesh Sargam என்ன நாங்களும் கருணாநிதியின் வழியை பின்பற்றணுமா? அதாவது திருட்டு ரயில் ஏறி, சென்னை வந்து, அரசியல் என்னும் சாக்கடையில் குதித்து, ஊரை ஏமாற்றி, முதல்வர் ஆகணுமா? அப்படி வளர்க்கவில்லை எங்கள் பெற்றோர்கள்.
Rate this:
ஷண்முக பிரியன் - AMBATTUR,இந்தியா
24-ஜூன்-202121:44:08 IST Report Abuse
ஷண்முக பிரியன் உன்னை எப்படி வளர்த்தார்கள் தெருவில் போறவன் வரவான காட்டி வளத்தர்களா என...
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
24-ஜூன்-202121:54:16 IST Report Abuse
Dhurveshஉன் கருது பார்த்த நீ வளர்நதா மாதிரியே தெரியலையே , ஒருத்தன் 15 லட்சம் என்று சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்தான் அவனை கேட்க உங்க அப்பா அம்மா சொல்லி வலர்களை யா...
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
24-ஜூன்-202120:21:02 IST Report Abuse
bal கொலை, கொள்ளை, சிலை திருட்டு, நில அபகரிப்பு, ட்ரைன்ல டிக்கெட் வாங்காம போவது, ஊழல்....அதானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X