தேர்தல் அறக்கட்டளை வாயிலாக பா.ஜ.,வுக்கு ரூ.276 கோடி நன்கொடை

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி :கடந்த, 2019 - 20ம் ஆண்டில், தேர்தல் அறக்கட்டளைகள் வாயிலாக, அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடையில், பா.ஜ.,வுக்கு, 276.45 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு, தனி நபர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் வழங்கும் நன்கொடையில், வெளிப்படை தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், தேர்தல் அறக்கட்டளைகளை அமைத்து அதன்வாயிலாக
தேர்தல் அறக்கட்டளை ,பா.ஜ.,, ரூ.276 கோடி நன்கொடை

புதுடில்லி :கடந்த, 2019 - 20ம் ஆண்டில், தேர்தல் அறக்கட்டளைகள் வாயிலாக, அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடையில், பா.ஜ.,வுக்கு, 276.45 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு, தனி நபர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் வழங்கும் நன்கொடையில், வெளிப்படை தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், தேர்தல் அறக்கட்டளைகளை அமைத்து அதன்வாயிலாக நன்கொடை வழங்கும் நடைமுறை மத்திய நேரடி வரிகள் வாரியம், கடந்த, 2013ல் உருவாக்கியது.இதில், 21 அறக்கட்டளைகள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 14 அறக்கட்டளைகளுக்கு கடந்த, 2019 - 20ம் ஆண்டில் நிதி அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த தொகை, பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன. எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு நிதி அளிக்கப்பட்டன என்ற விபரத்தை வெளியிடுமாறு, சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட விபரம்:

கடந்த, 2019 - 20ம் ஆண்டில், தேர்தல் அறக்கட்டளைகளுக்கு, ஜே.எஸ்.டபிள்யூ., நிறுவனம், 39.10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.இதற்கு அடுத்தபடியாக, அப்பல்லோ டயர், 30 கோடி ரூபாயும், இந்தியா புல்ஸ், 25 கோடி ரூபாயும் நிதி அளித்துள்ளன. இவை தவிர, 18 தனி நபர்களும் நன்கொடை அளித்துள்ளனர். இதில், 276.45 கோடி ரூபாய் நன்கொடை பா.ஜ.,வுக்கு அளிக்கப்பட்டது.

இது, வசூலான மொத்த நன்கொடையில், 76 சதவீதம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சிக்கு, 58 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டது. இது, மொத்த நன்கொடையில், 16 சதவீதம்.இந்த இரண்டு கட்சிகளை தவிர மேலும், 12 அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் அறக்கட்டளை வாயிலாக நன்கொடைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
24-ஜூன்-202113:19:39 IST Report Abuse
Sampath Kumar தேர்தல் அரா கட்டளையா ? இப்பணி ஒன்னு இருக்கா? புது புதுசா கிளப்பி பணம் பன்னுறார்ங்க அது சரி சாமி கோவில் சொத்தை பத்து நிமிடத்தில் விற்று பணம் பார்த்தவர்கள் தானே ஏன்னா செய்ய காளி முத்திடுது டௌசேர் கழண்டுடுத்து
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
24-ஜூன்-202108:08:38 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் பிஜேபி வாங்குற கட்சி நாங்க கோடி கோடியா கொடுக்குற கட்சி (உதாரணம் பிரசாந்த் கிஷோர்) யாரு பெட்டர் ன்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X