பாக்.,கில் தினமும் கட்டாய மதமாற்றம்: இந்தியா குற்றச்சாட்டு

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
ஜெனீவா-பாகிஸ்தானில், தினமும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐரோப்பாவில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.இதில், ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக குழுவின்முதன்மை செயலர் பவன்பதே பேசியதாவது:பாக்.,கில் தினந்தோறும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவது வாடிக்கையாக

ஜெனீவா-பாகிஸ்தானில், தினமும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாக, ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐரோப்பாவில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.



latest tamil news


இதில், ஐ.நா.,வுக்கான இந்திய துாதரக குழுவின்முதன்மை செயலர் பவன்பதே பேசியதாவது:பாக்.,கில் தினந்தோறும் கட்டாய மதமாற்றம் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. அங்கு ஹிந்து, கிறிஸ்துவர், சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையின சிறுமியரை கடத்தி, பாலியல் கொடுமை செய்து, கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்வது, அரசின் ஆதரவுடன் நடக்கிறது.


latest tamil news


கடந்த ஓராண்டில், 1,000த்திற்கும் மேற்பட்ட சிறுபான்மையின சிறுமியர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, திருமண பந்தத்தில் தள்ளப்படுகின்றனர். சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் சூறையாடப்படுகின்றன. இந்த கொடுமைகளுக்கு பாக்., அரசு துணை போகிறது. மேலும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட பாக்., அனுமதிக்கிறது. அதனால், சிறுபான்மையினர் மீதான கொடுமைகளுக்கும், பயங்கரவாதிகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், பாக்., அரசை, உலக நாடுகள் பொறுப்பேற்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil Raman - Coimbatore,இந்தியா
24-ஜூன்-202115:38:07 IST Report Abuse
Senthil Raman இந்தியாவில் இந்த சூழ்நிலை வராமலிருக்க இப்போதிருந்தே நடுநிலை இந்துக்கள், மதசார்பின்மை பேசும் இந்துக்கள் உட்பட அனைத்து இந்துக்களும் ஜாதிகள் வேறுபாடின்றி ஒன்றுபட்டு இருப்பது நல்லது.
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
24-ஜூன்-202113:59:47 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam "கைதிகள் பரிமாற்றம்" ஞாபகம் இருக்கிறதா? இங்குள்ளவர்களை அங்கு அனுப்பி, அங்குள்ளவர்களை இங்கு கொண்டுவருவது. மாற விரும்புபவர்கள் அங்கேயே இருக்கலாம், இங்கு மாற விரும்புபவர்கள் இங்கேயே இருக்கலாம்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-ஜூன்-202113:22:08 IST Report Abuse
Sampath Kumar முடிந்தால் நீங்களும் எங்க மாற்றுங்க அப்பத்தான் பாலன்ஸ் ஆகும் ஹி ஹி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X