பொது செய்தி

இந்தியா

பிளஸ் 2 தேர்வை நடத்த அனுமதி கேட்கும் ஆந்திர மாநிலம்

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி-'வேறு மாற்று வழி இல்லாததால், பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயமாகிறது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம். தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி

புதுடில்லி-'வேறு மாற்று வழி இல்லாததால், பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயமாகிறது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம். தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news


கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மாநில கல்வி வாரிய தேர்வுகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.இந்நிலையில், ஆந்திர அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது கொரோனா வைரஸ் பரவல் மாநிலத்தில் குறைவாகவே உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர் களுக்கு, 'கிரேடு' முறையே வழங்கப்படுகிறது.


latest tamil news


அதனால், முந்தையத் தேர்வுகள் அடிப்படையிலோ, பள்ளி அளவில் நடந்த தேர்வுகள் அடிப்படையிலோ, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க முடியாது.மாணவர் நலன் கருதி, தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும்.

ஏற்கனவே, செய்முறை தேர்வுகள் முடிந்து விட்டன. ஜூலை இறுதி வாரத்தில் இருந்து தேர்வு நடத்த திட்டமிட்டு உள்ளோம்.போதிய கொரோனா பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இது, இன்று விசாரிக்கப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N. Srinivasan - Chennai,இந்தியா
24-ஜூன்-202114:35:43 IST Report Abuse
N. Srinivasan மாணவர்களின் கல்வி மொத்தமாக அரசியல் ஆகி விட்டது. ஒரு மாநிலம் நடத்துகிறது ஒரு மாநிலம் இல்லை. அனால் எவரும் பரீட்சை எழுதும் மாணவர்களிடம் கருத்து கேட்டு செய்வதில்லை. மோடி சொல்வதை எதிர்க்கவேண்டும் என்ற மனப்பான்மை தான் உள்ளது எங்கும். எல்லோரும் சேர்ந்து ஒரு நிலையான வழிமுறை எடுக்கமுடியாது அரசியல் தான் எங்கும். நூறு வருடங்களாக இல்லாத ஒரு நோய் வந்த நேரத்தில் எந்த அரசியல் கட்சி ஆட்சியாளர்கள் என்ன பண்ண முடியம் என்ற சிந்தனை கூட இல்லாத அரசியல் குப்பை ஆகி விட்டது.
Rate this:
Cancel
Coimbatore - Coimbatore,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜூன்-202112:45:09 IST Report Abuse
Coimbatore Good decision by state govt. For higher studies +2 marks are required.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X