பொது செய்தி

இந்தியா

வீடில்லாதவர்களுக்கும் தடுப்பூசி: மத்திய அரசு..

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: 'வீடில்லாதவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, 'கோவின்' இணையதளத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அறிவித்தது.'ஆனால், கோவின் இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய, ஆங்கில அறிவு, தொழில்நுட்ப அறிவு, இன்டர்நெட் இணைப்புடன் கூடிய

புதுடில்லி: 'வீடில்லாதவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, 'கோவின்' இணையதளத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அறிவித்தது.



latest tamil news


'ஆனால், கோவின் இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய, ஆங்கில அறிவு, தொழில்நுட்ப அறிவு, இன்டர்நெட் இணைப்புடன் கூடிய ஸ்மார்ட் போன் அல்லது கம்ப்யூட்டர் ஆகியவை தேவை.கட்டாயமில்லை'வீடில்லாத ஏழைகளுக்கு, இந்த வசதிகள் இல்லாததால், அவர்களால் தங்கள் பெயரை, கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய முடியவில்லை. இதனால், அவர்களால் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியவில்லை' என, சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து, மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதேபோல், மொபைல் போன், முகவரி சான்றிதழ் ஆகியவையும் கட்டாயமில்லை.அறிக்கைகோவின் இணையதளத்தில் பயன்பாட்டு மொழியாக, ஆங்கிலம் தவிர, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட, 12 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.


latest tamil news


மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய ரேஷன் அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை என, ஒன்பது விதமான அடையாள அட்டைகளை பயன்படுத்தி, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒன்பது அட்டைகளும் இல்லாதவர்களுக்காக, சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பயன் அடைந்துள்ளனர். அதனால், வீடற்ற ஏழைகளுக்கும், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
24-ஜூன்-202107:39:02 IST Report Abuse
மதுரை விருமாண்டி வீடு இல்லை, அட்ரஸ் இல்லை, ஆனா ஆன்லைன்லே பதிவு பண்ணணும்.
Rate this:
Cancel
24-ஜூன்-202107:10:59 IST Report Abuse
ஆப்பு பஹூத் அச்சு ஹைன். எல்லோருக்கும் வூடு குடுப்போம்னு சொன்னோம் ஹைன். வூடு குட்த்து முடிச்சுட்டோம் ஹைன். இனிமேல் வுய்டு இல்லாதவங்களுக்கு தட்ப்பூசி மட்டும் போடுவோம் ஹைன். அச்சே தின் ஆகயா ஹைன். அதே மாதிரி 2 கோடி பேருக்கு வேலை குத்தோம் ஹைன். இனிமே வேலை இல்லாதவங்களுக்கு தட்ப்பூசி ஃப்ரீயா போடுவோம் ஹைன். ஜோரா கைதட்டி வெள்க்கேத்துங்க ஹைன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X