கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிவசங்கர் பாபா வழக்கில் 5 பேர் ரகசிய வாக்குமூலம்

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
செங்கல்பட்டு--பாலியல் புகாரில் சிக்கிய, பள்ளி உரிமையாளர் சிவசங்கர் பாபா வழக்கில், இரண்டு முன்னாள் மாணவியர் உட்பட ஐந்து பேர், நீதிபதிகளிடம் நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த, புதுப்பாக்கத்தில், 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளி உள்ளது. இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, பாலியல் தொல்லை கொடுத்ததாக, மூன்று

செங்கல்பட்டு--பாலியல் புகாரில் சிக்கிய, பள்ளி உரிமையாளர் சிவசங்கர் பாபா வழக்கில், இரண்டு முன்னாள் மாணவியர் உட்பட ஐந்து பேர், நீதிபதிகளிடம் நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.



latest tamil news


செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த, புதுப்பாக்கத்தில், 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளி உள்ளது. இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, பாலியல் தொல்லை கொடுத்ததாக, மூன்று மாணவியர் போலீசில் புகார் அளித்தனர்.இதையடுத்து, சிவசங்கர் பாபா மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்த ஏழு பேர் மீது வழக்கு பதியப்பட்டு, சென்னை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.சிவசங்கர் பாபாவை, சமீபத்தில் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், 17ம் தேதி ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


latest tamil news


உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி., காவலில் விசாரிக்கும் மனு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி தமிழரசி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அம்மனு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.இதற்கிடையில், சிவசங்கர் பாபாவை பற்றி, முன்னாள் மாணவியர் இருவர் உட்பட ஐந்து பேரிடம், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரகசிய வாக்குமூலம் பெற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
24-ஜூன்-202115:09:17 IST Report Abuse
Vena Suna சாட்சிகள் என்ன இருக்கின்றன? அது என்ன என்று பார்க்க வேண்டும்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
24-ஜூன்-202113:50:33 IST Report Abuse
siriyaar அப்ப காலத்தில கஞ்ச கேசு மகன் காலத்தில .பாலியல் கேசு நல்ல மாற்றம் நல்ல மாற்றம்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-ஜூன்-202113:10:13 IST Report Abuse
Sampath Kumar அரிப்பு எடுத்தவன் எல்லாம் சாமியார் போர்வைக்குள் புகுந்து கொடுநாட்டகாசம் செய்வான் பாதிக்க பட்டவன் வெளியே சொல்வது இருக்க ஆவணி மிரட்டுவான் தன மீது தப்பு இல்லை என்றால் இந்த காமுகன் ஏன் தப்பி டெல்லிக்கு ஓடிஏ வேண்டும் ??? சும்மா தீ மு கா மீது பழி போடுவது காழ்புணர்ச்சிதானே தவிர குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் கேவலமும் கோடா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X