பொது செய்தி

இந்தியா

2 கோடி பெரிதா? 86 லட்சம் பெரிதா? தடுப்பூசி சாதனையில் நடந்தது இதுதான்!

Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
இந்தியாவில், 86 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது உலக சாதனையாக சொல்லப்பட்டது. 'சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்' என, பிரதமர் அறிவித்தார். பதிலுக்கு சுகாதார அமைச்சரும், பா.ஜ., தலைவர்களும், பிரதமரை பாராட்டி அறிக்கை விட்டனர்.ஒரே நாள் என்பது, ஜூன் 21 திங்கட்கிழமை. 'உலகின் மிகப்பெரிய இலவச தடுப்பூசி திட்டம்' என, பிரதமர் படத்துடன், அனைத்து மொழிகளிலும்
vaccine, covid, record, தடுப்பூசி, மாநிலங்கள்,

இந்தியாவில், 86 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது உலக சாதனையாக சொல்லப்பட்டது. 'சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்' என, பிரதமர் அறிவித்தார். பதிலுக்கு சுகாதார அமைச்சரும், பா.ஜ., தலைவர்களும், பிரதமரை பாராட்டி அறிக்கை விட்டனர்.

ஒரே நாள் என்பது, ஜூன் 21 திங்கட்கிழமை. 'உலகின் மிகப்பெரிய இலவச தடுப்பூசி திட்டம்' என, பிரதமர் படத்துடன், அனைத்து மொழிகளிலும் விளம்பரம் வெளியிடப்பட்டது. 'திட்டம் அமோக வெற்றி' என, அன்று மாலையே செய்தி வெளியானது.


சந்தேகம்


மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு, நிர்வாகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், 'அனைவருக்கும் தடுப்பூசி; அதுவும் இலவசமாக. நன்றி மோடி சார்' என்று, பிரதமர் பெயருக்கு 'டுவிட்' செய்யச் சொன்னது சுற்றறிக்கை.பல்கலை மானியக் குழு என சொல்லப்படுகிற யு.ஜி.சி., ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. மேலே சொன்ன அதே 'மெசேஜ்' தான். 'மோடி சாருக்கு' பதில், 'மோடி ஜி' என மாற்றி, ஒவ்வொரு கல்லுாரியிலும், பல்கலையிலும் 'பேனர்' வைக்கச் சொன்னது. உலக சாதனையை கொண்டாடுவது தப்பு இல்லை. உண்மையில் அது சாதனை தானா என்பது பலரின் சந்தேகம்.


ஏன் அப்படி?


சீனா இந்த மாத துவக்கத்தில் தினமும், இரண்டு கோடி பேருக்கு தடுப்பூசி போட்டிருக்கிறது. அதுவும் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக. எனவே, அதில் பாதிக்கும் குறைவான 86 லட்சம் தடுப்பூசி என்பது, உலக சாதனையாக இருக்க முடியாது.சரி, இந்த 86 லட்சம் எப்படி எட்டப்பட்டது என்று பார்த்தால், பா.ஜ., ஆளும் மாநில அரசுகளின் அபார பங்களிப்பே காரணம். இவை தினசரி ஊசி போடுவதை, சில நாட்கள் நிறுத்தி விட்டு அல்லது குறைத்து விட்டு, 'எல்லாரும் திங்கட்கிழமை போட்டுக் கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டன.இப்படி சேர்த்து வைத்தும், ஒரு கோடி என்ற அறிவிக்கப்படாத இலக்கை எட்ட முடியாமல் போனது வேறு விஷயம்.சில உதாரணங்களை பார்க்கலாம்.


latest tamil news



* மத்திய பிரதேசம் திங்களன்று, 17 லட்சம் பேருக்கு ஊசி போட்டது. அதற்கான 'பில்டப்'பை ஐந்து நாளுக்கு முன் துவங்கியது. புதன் கிழமை, 3.4 லட்சம் பேருக்கு ஊசி போட்டது. மறுநாள் அது 1.2 லட்சமாக குறைக்கப்பட்டது. அடுத்த நாள் 14 ஆயிரமாக சுருங்கி, ஞாயிறு அன்று வெறும் 692 பேரோடு நிறுத்திக் கொண்டது

* திங்கள் அன்று 7.3 லட்சம் ஊசி போட்ட உத்தர பிரதேசம், ஞாயிறு போட்டது 8,000த்து சொச்சம். கர்நாடகா திங்கள் சாதனை, 11 லட்சம்; முந்தைய நாள் போட்ட ஊசி, 68 ஆயிரம் தான்* குஜராத் திங்கள் சாதனை 5 லட்சம்; ஞாயிறன்று 1.9 லட்சம் தான்

*அசாம் அன்று 33 ஆயிரத்தில் இருந்து அடுத்த நாள், 3.6 லட்சத்துக்கு தாவியது.திங்கட்கிழமை படைத்த சாதனையை, மறுநாள் எந்த மாநிலமும் துாரமாக நின்றுகூட எட்டிப் பார்க்கவில்லை. பல லட்சங்கள் மீண்டும் சில ஆயிரங்களுக்கு வந்து விட்டன.

என்றாலும், ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும், பா.ஜ., தொண்டர்கள் குழுவை நிறுத்தி, மக்களுக்கு உதவ ஆணையிட்டுள்ளார் கட்சித் தலைவர் நட்டா.உ.பி., உட்பட எட்டு மாநிலங்களில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வருகிறது. அதற்குள் மோடியின் செல்வாக்கை செப்பனிட்டு, 'கோவிட்' மேகத்துக்கு வெளியே கொண்டு வர கட்சி விரும்புகிறது. இவ்வாறான உலக சாதனை திட்டங்கள் அதற்கு உதவுமா என்பது தான் கேள்வி.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karikalan - chennai,இந்தியா
24-ஜூன்-202123:27:28 IST Report Abuse
karikalan கேவலம்...
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
24-ஜூன்-202120:34:09 IST Report Abuse
bal இங்கே ப்ரோக்கர்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது...
Rate this:
Cancel
24-ஜூன்-202118:40:20 IST Report Abuse
மாயவரம் சேகர் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தடுப்பூசிக்கு எதிர்ப்பு இருந்ததே...அந்த மாநிலங்களில் வேண்டுமென்ற இந்த குறிப்பிட்ட நாளில் தடுப்பூசிக்கு ஆதரவு கொடுக்காத செய்தி எதுவுமே இல்லையா? எல்லா நாளும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், மக்களே அலட்சியமாக இருந்ததை சேர்த்திருக்கலாமே?கோவிட் தொற்று காலத்தில் இலவசம் வாங்க ரேஷன் கடைக்கு வரச் சொன்ன கட்சி பற்றி செய்தி போடுவாரா?வங்கி கணக்கில் பணம் போட வசதி இருக்கும் போது ஏன் அப்படி என கேட்கப்பட்டதா?ஒரு குறிப்பிட்ட நாளில்,மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள வைப்பது தவறா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X