அரசியல் செய்தி

தமிழ்நாடு

அன்று நீங்கள் சொன்னது தான் இன்று என் பதில்: முதல்வர்

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
சென்னை:''கடந்தாண்டு, நீங்கள் ஆட்சியில் இருந்தபோது, என்ன பதில் கூறினீர்களோ, அதுதான் இப்போது என் பதில்,'' என, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:இ.பி.எஸ்., - எதிர்க்கட்சி தலைவர்:அ.தி.மு.க., அரசு, 'நீட்' தேர்வை ரத்து செய்யவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், 2010 டிசம்பர் மாதம் தான், நீட்
ஸ்டாலின், திமுக, முதல்வர், பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர்

சென்னை:''கடந்தாண்டு, நீங்கள் ஆட்சியில் இருந்தபோது, என்ன பதில் கூறினீர்களோ, அதுதான் இப்போது என் பதில்,'' என, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:


இ.பி.எஸ்., - எதிர்க்கட்சி தலைவர்:

அ.தி.மு.க., அரசு, 'நீட்' தேர்வை ரத்து செய்யவில்லை என்று கூறுகின்றனர். ஆனால், 2010 டிசம்பர் மாதம் தான், நீட் தேர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, தி.மு.க., தான், தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. தி.மு.க., அங்கம் வகித்த மத்திய அரசின், சுகாதாரத் துறை அமைச்சராக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத் இருந்தார். தி.மு.க., தான் நீட் தேர்வை கொண்டு வந்தது.


மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்:

யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து, பலமுறை பேசப்பட்டு விட்டது. நீட் தேர்வு வேண்டாம் என, இரண்டு முறை சட்டசபையில் தீர்மானம், மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட விபரத்தை கூட, நான்கு ஆண்டுகளாக, சட்டசபையில் தெரிவிக்கவே இல்லை.தி.மு.க., ஆட்சியில், நீட் தேர்வை, அப்போதைய முதல்வர் கருணாநிதி அனுமதிக்கவே இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதாவும் அனுமதிக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக, இ.பி.எஸ்., ஆட்சியில் தான் அனுமதிக்கப்பட்டது. தமிழகத்தில் நீட் தேர்வு நடப்பதற்கு, இ.பி.எஸ்., தான் காரணம்.


உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி:

நீட் தேர்வு மட்டுமல்ல, இன்ஜினியரிங் உள்ளிட்ட, எந்த நுழைவு தேர்வையும், தி.மு.க., ஆட்சியில், கருணாநிதி அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் நுழைவு தேர்வு நுழையாமல் இருப்பதற்கு, அவர் சட்டம் போட்டார். இப்போது, நீட் தேர்வு பாதிப்பை ஆராய குழு அமைக்கப்பட்டு உள்ளது.


முதல்வர் ஸ்டாலின்:

விரும்பும் மாநிலங்கள், நீட் தேர்வை அனுமதிக்கலாம் என்று, முந்தைய மத்திய அரசு கூறியது. அப்போதும் உச்ச நீதிமன்றம் சென்று, இந்த தேர்வை அனுமதிக்க கூடாது என, கருணாநிதி தடை வாங்கினார். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இணைந்து தீர்மானம், சட்ட மசோதா நிறைவேற்றி, இரண்டு முறை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினோம்; அது நிராகரிக்கப்பட்டது.தடுக்கும் முயற்சியில், என்றைக்கும் பின்வாங்க மாட்டோம். பிரதமரை சந்தித்தபோது, இந்த கோரிக்கையை, இரண்டு முறை அழுத்தமாக வலியுறுத்தி வந்துள்ளேன். இது, தமிழக மாணவர்களின் உயிர்நாடி பிரச்னை. இதனால், எத்தனை பேரை இழந்திருக்கிறோம். அதனால் தான் யோசித்து, நீட்டை தடை செய்ய, சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு, குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு விலக்கு வாங்குவோம்.


எதிர்க்கட்சி தலைவர்:

இந்த ஆண்டு, நீட் தேர்வு உண்டா; இல்லையா என்று, தெளிவுப்படுத்த வேண்டும். மாணவர்கள் தயாராக வேண்டும்.


latest tamil news
முதல்வர்:

கடந்த ஆண்டு, நீங்கள் ஆட்சியில் இருந்தபோது, என்ன பதில் கூறினீர்களோ; அதுதான் இப்போது என் பதில். நீட்டை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நீங்களும் எங்களுடன் தோள் கொடுங்கள்; துணை நில்லுங்கள்


இ.பி.எஸ்:

நுாற்றுக்கு நுாறு சதவீதம் துணை நிற்போம்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arv Sekar - Riyadh,சவுதி அரேபியா
26-ஜூன்-202100:32:48 IST Report Abuse
Arv Sekar கருணாநிதி மற்றும் அந்த கட்சியில் உள்ளவனுவோ யாரும் சொல்லுறத செய்யிற பழக்கம் எப்பவும் இல்லை. எத்தனை பொய்யா சொல்லியாவது ஆட்சிக்கு வரணும் கொள்ளையை தொடங்கணும்
Rate this:
Cancel
Arv Sekar - Riyadh,சவுதி அரேபியா
26-ஜூன்-202100:29:20 IST Report Abuse
Arv Sekar நரேஷ் சோனியாவை பிரதமரா ஆக்கிட்டால் சரி ஆகிவிடுமா.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
25-ஜூன்-202113:51:53 IST Report Abuse
g.s,rajan தமிழகத்தில் துக்ளக் ஆட்சி தான் நடைபெறுகிறது, டாஸ்மாக் திறக்கலாம் அனால் கோயில்கள் திறக்க கூடாது .தமிழக முதல்வர் ஸ்டாலின் வேண்டும் என்றே கொரோனா பெயரைச் சொல்லி சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் போக்குவரத்தை தடை செய்து மக்களை பழி வாங்கும் செயலில் ஈடுபடுவது போல் தெரிகிறது ,இதற்குத்தான் மக்கள் திமுகவைத்த தேர்ந்து எடுத்தார்களா?இதே நிலை தொடர்ந்தால் இன்னும் மோசம் ஆனால் மக்கள் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பேருந்துகளை இயக்கச் சொல்லி அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் இறங்குவார்கள் கோயில்களைத் திறக்கச் சொல்லிப் போராடுவார்கள்,மன நிம்மதி இல்லாமல் தவிக்கின்றனர் தமிழக அரசு .ஏன் தான் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிற்று எரிச்சலை கொட்டிக் கொள்கிறதோ தெரியவில்லை ,இன்னும் வாட்டி வதைத்தால் ,மக்களின் கொடூர சாபத்திற்கு அரசு ஆளாக நேரிடும் ,சாமானிய மக்கள் அன்றாடம் படும் பாடு அரசுக்குத் தெரியவில்லையா?ஏன் மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயில்கள் இயக்கப்பட்டுக் கொண்டுதானே உள்ளது அங்கு கொரோனா பரவாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X