பொது செய்தி

இந்தியா

உலகின் பெரும் நன்கொடையாளர் பட்டியல்: முதலிடத்தில் இந்தியாவின் ஜாம்ஷெட் ஜி டாடா

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
மும்பை: கடந்த நுாற்றாண்டில், உலகளவிலான நன்கொடையாளர்கள் பட்டியலில், மிகப் பெரிய பரோபகாரியாக இருந்தவர், இந்தியாவை சேர்ந்த டாடா குழுமத்தின் நிறுவனரான ஜாம்ஷெட் ஜி டாடா என, 'ஹுருன்' மற்றும் எடெல்கிவ் பவுண்டேஷன்' இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்விரு நிறுவனங்களும் இணைந்து, கடந்த நுாற்றாண்டில், உலகளவிலான, 'டாப் - 50' நன்கொடையாளர்கள் பட்டியலை
நன்கொடையாளர்,  இந்தியா, ஜாம்ஷெட் ஜி டாடா


மும்பை: கடந்த நுாற்றாண்டில், உலகளவிலான நன்கொடையாளர்கள் பட்டியலில், மிகப் பெரிய பரோபகாரியாக இருந்தவர், இந்தியாவை சேர்ந்த டாடா குழுமத்தின் நிறுவனரான ஜாம்ஷெட் ஜி டாடா என, 'ஹுருன்' மற்றும் எடெல்கிவ் பவுண்டேஷன்' இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் இணைந்து, கடந்த நுாற்றாண்டில், உலகளவிலான, 'டாப் - 50' நன்கொடையாளர்கள் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளன.இதில், 102 பில்லியன் டாலர் அளவுக்கு நன்கொடை வழங்கி, முதலிடத்தை வகிக்கிறார், டாடா குழுமத்தின் நிறுவனரான, ஜாம்ஷெட் ஜி டாடா. அவர் வழங்கிய நன்கொடை, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட, 7.55 லட்சம் கோடி ரூபாய் ஆகும். பட்டியலில் இவருக்கு அடுத்தபடியாக தான், பில்கேட்ஸ், வாரன் பபெட், ஜார்ஜ் சோரஸ், ராக்பெல்லர் போன்றவர்கள் வருகின்றனர்.

இந்த அறிக்கையை வெளியிட்ட, 'ஹுருன்' நிறுவனத்தின் தலைவரும், தலைமை ஆராய்ச்சியாளருமான ரூபர்ட் ஹூக்வெர்ப், செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கடந்த நுாற்றாண்டில் பிரபலமான நன்கொடையாளர்கள் குறித்து யோசிக்கும்போது, அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் தான் நம் மனதில் எழுகிறார்கள்.''ஆனால் உண்மையில், ஜாம்ஷெட் ஜி டாடா தான் மிகப்பெரிய அளவில் நன்கொடைகளை வழங்கி உள்ளார்,'' என தெரிவித்தார்.

கல்வி, சுகாதாரம் ஆகிய இரு துறைகளுக்கும், டாடா அதிகளவு நன்கொடைகளை வழங்கி இருக்கிறார்.இந்த, 50 பேர் கொண்ட பட்டியலில், டாடாவை அடுத்து இடம்பெற்ற இன்னொரு ஒரே இந்தியர், 'விப்ரோ' நிறுவனர் அஜீம் பிரேம்ஜி ஆவார்.
நோபல் பரிசை ஏற்படுத்திய, ஆல்ப்ரட் நோபல் கூட இந்த வரிசையில் இடம்பெறவில்லை என்பதும் இன்னொரு குறிப்பிடத்தக்க தகவலாகும்.இந்த, 50 பரோபாரிகளில், 38 பேர், அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 5 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். சீனாவிலிருந்து 3 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.


latest tamil news
மேலும், பட்டியலில் இடம்பெற்றிருக்கும், 50 பேர்களில், 37 பேர் இன்று உயிருடன் இல்லை. 13 பேர் மட்டுமே உள்ளனர்.கடந்த நூற்றாண்டில் இந்த, 50 பேரும் வழங்கிய மொத்த தொகை, 61.57 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இன்றைய கோடீஸ்வரர்கள் குறித்து, 'ஹுருன்' நிறுவனர் பேசும்போது, ''அவர்கள் பரோபகாரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ''அவர்கள் கொடுப்பதை விட, பலமடங்கு வேகமாக பணத்தை சம்பாதிக்கிறார்கள்,'' என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
30-ஜூன்-202110:37:11 IST Report Abuse
Apposthalan samlin இவர்களுக்கு முன்னாள் அம்பானி அதானி வேஸ்ட் தான்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
24-ஜூன்-202120:59:08 IST Report Abuse
M  Ramachandran டாடா சுதந்திரம் பெரும் முன் பிலிருந்து பல தொழிற் சாலைகளை அமைத்து தொழிலார்கள் நலன் காத்து அவர்களுக்கு ஞ்யாயமாக கிடைக்க வேண்டிய எல்லா சலுகை களையும் கொடுத்து ஒரு முன் உதாரணமாக திகழ்ந்த குடும்பம். சாமீ பதில் கூட ஒரு பெருந்தொகை தோற்று ண்பிவாரந்தித்திற்கு7 கொடுத்தார்கள். அதே கல்கத்தா பிர்லா கம்பெனி ஒரு வட்டி கடை போன்று தான் [போராட்ட முதலை பல மடங்கு லாபத்துடன் ஊட்டி கொண்டிருக்கிறது.எ3அளியவர்களுக்கு மத்தியதர வேலைக்கு போலாகும் குடும்பஸ்தினார் மிக குறைந்த விலையில் கார் வாங்கி நல்ல முறையில் அலுவகத்திற்கு சென்று திரும்ப வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சிறிய கார் தயாரித்தார்கள். ஆனால் நஷ்டம் அடைந்து அதை நிறுத்தும் படி ஆயிற்று. இன்னமும் டாடா நானோ காரில் அதிலுள்ள பலவகையான சிறப்பம்சத்துடன் விற்றார்கள். ப்ளூ டூத் ரேடியோ பின்னாடி சிவப்பு விளக்குடன் கூடிய ஸ்பாய்லர் பனி மூட்ட காலங்களில் உபயோக படுத்தும் முன் விளக்குகள், காரின் ஓட்டுநர் இருக்கை உயரமாக இருப்பவர்களுக்கு தகுந்த படி, ஏ சி வசதி இன்னும் பவர் ஸ்டீரிங் சென்டர் லாக் இன்னும் பல பல. இந்த வசதிகளை நான் மாருதி சிரியா காரில் சேர்த்து வாங்க ஆசைபட்டேன். அவர்கள் பில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ருபாய் ஆகும் மென்றார்கள். அது மாட்டு மெல்ல கதவுகளின் உல் கைபிடி கையை நுழைக்க கஷ்ட படவேண்டும். இந்த காரில் சென்னையிலிருந்து தஞ்சாவூர் ஐந்து அல்லது ஐந்தரை மணி நேரத்தில் நான் சென்று சேர்ந்திருக்கிரேன். நடுவில் ஒரு இடத்தில் ஓட்டலில் அரை மணி ஒய்வு எடுத்து சென்றுள்ளேன். நூறு கிலோ மீட்டர் வேகதிலும் ஊட்டியிருக்கிறேன். ஏ சி யுடன் இருபத்தி இரண்டு கிலோ மீட்டர் ஒரு லிட்டருக்கு என்னுடைய ட்ரய்விங்கில் கிடைத்தது. நல்ல கார் ஆனால் கார் விலேய் கட்டுபடி யாகமால் நிறுத்தும் படி ஆகி விட்டது..
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
24-ஜூன்-202120:33:33 IST Report Abuse
M  Ramachandran டாடா குடும்பம் ஒரு பார்சி குடும்பம். தேச பாகித்தி உள்ளவார்கள். தமிழ் நாட்டில் கட்சி பெயரை சொல்லி குடும்ப குடும்ப மாக கொள்ளை அடிப்பவர்கள் தேசபக்தியை பற்றி அறிந்திராதவர்கள். குறுகிய மாநில பற்று கொண்டவர்கள் அப்போ தானே தான் வெள்ளி நாடு சென்று படித்த படிப்பை தன நலன் குடும்பநலனுக்காக அரசியல் பின் பலமுடன் பல பல திட்டங்கள் வகுத்து இந்திய பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X