அவதூறு பேச்சு: சூரத் நீதிமன்றத்தில் ராகுல் மீண்டும் ஆஜர்

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சூரத்: அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்., எம்.பி., ராகுல், சூரத் நீதிமன்றத்தில் இன்று, இறுதி வாக்குமூலத்தை சமர்ப்பிக்க மீண்டும் ஆஜரானார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, 'நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என, திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் ஏன் மோடி என்ற பெயர் இருக்கிறது' எனப் பேசியதாக

சூரத்: அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்., எம்.பி., ராகுல், சூரத் நீதிமன்றத்தில் இன்று, இறுதி வாக்குமூலத்தை சமர்ப்பிக்க மீண்டும் ஆஜரானார்.



latest tamil news



காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, 'நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என, திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் ஏன் மோடி என்ற பெயர் இருக்கிறது' எனப் பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராகுல் மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பா.ஜ., - எம்.எல்.ஏ., புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.


latest tamil news



'வழக்கு விசாரணையின்போது ராகுல் நேரில் ஆஜராக வேண்டும்' என, நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ராகுல் சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அவதூறாக ஏதும் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தனது இறுதி வாக்குமூலத்தை சமர்ப்பிக்க ஜூன் 24ம் தேதி (இன்று) ராகுல் காந்தி மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி இன்று ராகுல் நேரில் ஆஜரானார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூன்-202109:10:06 IST Report Abuse
பேசும் தமிழன் இவர் முதலில் இவரது உண்மையான பெயரை சொல்ல வேண்டும்... பெயருக்கு பின்னால் கான் போய் காந்தி எப்படி வந்தார்... எதுக்கு வந்தார் என்று சொல்ல வேண்டும்.... நாட்டு மக்களை ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது
Rate this:
Cancel
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
24-ஜூன்-202122:38:26 IST Report Abuse
iconoclast அட ரவுலு எம்பா நீ வேற அடிக்கடி உண்மையை சொல்ற
Rate this:
Cancel
kattus - chennai,இந்தியா
24-ஜூன்-202120:47:24 IST Report Abuse
kattus எங்கள் தளபதி அகில உலக சினிமாவின் ஒரே நாயகன் உடய் அவர்கள் ஜேஜே அவர்களையும் மோடியையும் இணைத்து பேசாத பேச்சா? பிஜேபி காரன் யாரவது தமிழ் நாட்டில் case போடுவானா? இல்ல ஜட்ஜ் case எடுப்பரா? Topa தலையன் suicide பண்ணிடுவாரு 😂👌
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X