தாய்லாந்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம்: கோவிட் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம்

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பாங்காக்: தாய்லாந்தில் அரசியல் சீர்த்திருத்தங்கள் கோரி தலைநகர் பாங்காக்கில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி உள்ளன. தாய்லாந்தில் கடந்த 2014ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின், முன்னாள் ராணுவத் தலைவர் பிராயுத் சான் ஓச்சா அந்நாட்டுப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு ஆர்ப்பாட்டங்கள்

பாங்காக்: தாய்லாந்தில் அரசியல் சீர்த்திருத்தங்கள் கோரி தலைநகர் பாங்காக்கில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி உள்ளன.



latest tamil news



தாய்லாந்தில் கடந்த 2014ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின், முன்னாள் ராணுவத் தலைவர் பிராயுத் சான் ஓச்சா அந்நாட்டுப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. குறிப்பாக, கடந்த மார்ச் மாதம், தாய்லந்து அரசாங்கத்திற்கு எதிராக பேங்காக்கில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், கோவிட் பரவலால் ஆர்ப்பாட்டத்தின் தீவிரம் குறைந்தது.


latest tamil news



இந்நிலையில், அரசாட்சியில் இருந்து அரசமைப்புக்கு உட்பட்ட மன்னராட்சியாக தாய்லாந்து மாறி இன்றோடு (ஜூன் 24) 89 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதை முன்னிட்டு தாய்லாந்தில் அரசியல் சீர்த்திருத்தங்கள் கோரி தலைநகர் பேங்காக்கில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கி உள்ளன. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். 'மக்கள் அரசமைப்புச் சட்டம்' எனும் பெயரில் ஒரு குழு, தங்களது சொந்தப் பதிப்பைச் சமர்ப்பிக்க, நாடாளுமன்றக் கட்டடம் நோக்கி பேரணி செல்கிறது.

ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் பங்கேற்றோர் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருப்பதால் அங்கு மீண்டும் கோவிட் பெருந்தொற்றின் பரவல் அதிகரிக்கக் கூடும் என, மருத்துவர்கள் அச்சம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
24-ஜூன்-202115:10:18 IST Report Abuse
 Muruga Vel தாய்லாந்து சின்ன தம்பி எப்படி இருக்கார்
Rate this:
R Kumar - Triolet,மொரிஷியஸ்
24-ஜூன்-202116:10:12 IST Report Abuse
R Kumarயாரு நம் பட்டாயா இளவரசரா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X