பொது செய்தி

இந்தியா

பள்ளிகளை திறக்க தீவிரமாக முயல வேண்டும்: எய்ம்ஸ் இயக்குநர் கருத்து

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: 'பள்ளிகளைத் திறக்க தீவிரமாக முயல வேண்டும்' என, எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.கோவிட் பெருந்தொற்று பரவலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து, கடந்த ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு மேல்நிலை வகுப்புகள்

புதுடில்லி: 'பள்ளிகளைத் திறக்க தீவிரமாக முயல வேண்டும்' என, எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.



latest tamil news



கோவிட் பெருந்தொற்று பரவலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து, கடந்த ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு மேல்நிலை வகுப்புகள் நடத்தப்பட்டன. கோவிட் 2வது அலை வேகமெடுத்ததால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. புதிய கல்வியாண்டில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் விளிம்புநிலைக் குழந்தைகளுக்கு இணைய வழிக் கல்வி பெரும்பாலும் சாத்தியமாகவில்லை. இந்நிலையில் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளதாவது:


latest tamil news



பள்ளிகள் பாடம் கற்பிக்கும் இடமாக மட்டும் இருப்பதில்லை. ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் தனித்தனித் திறமைகளோடு வளர்கிறார்கள். சக மாணவர்களுடன் ஒவ்வொருவரும் உரையாடுகிறார்கள். குழந்தைகளிடம் தனித்திறனை வளர்ப்பதில் பள்ளிகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

இளம் தலைமுறை, குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளுக்கு வசதியில்லாத விளிம்புநிலை மாணவர்களில் கல்வி தற்போது கடுமையாக பாதித்துள்ளது. ஆகவே, மீண்டும் பள்ளிகளை திறக்க நாம் தீவிரமாக முயல வேண்டும். அதுகுறித்த திட்டங்கள் விரைவில் வகுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
syuduu -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூன்-202109:31:00 IST Report Abuse
syuduu corporate agent
Rate this:
Cancel
25-ஜூன்-202105:31:24 IST Report Abuse
ஆப்பு மதுரையில் எய்ம்ஸ் கட்டுறேன்னு சொல்லி அடிக்கல் நாட்டி நாலு வருஷம் ஆச்சுங்கோ... அதுல ஒரு செங்கல்ல உருவி மக்களிடம் காமிச்சு எலக்ஷனில் ஜெயிச்சுட்டாங்கோ... இதெல்லாம் உங்களுக்கு தெரிய நியாயமில்லிங்கோ...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-ஜூன்-202105:03:38 IST Report Abuse
Mani . V ஆமா, பள்ளிக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? ஓ நோய் தொற்று அதிகமானால் இவர்கள் கல்லா கட்ட வசதியாக இருக்குமே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X