பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 6,162 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 6,162 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 155 பேர் உயிரிழந்து உள்ளனர். 9,046 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 34 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 43 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 6,162 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 155 பேர் உயிரிழந்து உள்ளனர். 9,046 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 34 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 43 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 70,283 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 6,162 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,49,577 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,18,46,027 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 3,517 பேர் ஆண்கள், 2,645 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,32,433 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,17,106 ஆகவும் அதிகரித்து உள்ளது. 9,046 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,67,831 ஆக உயர்ந்துள்ளது.

155 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 57 பேர் தனியார் மருத்துவமனையிலும், 98 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,901 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
25-ஜூன்-202106:01:23 IST Report Abuse
Nalam Virumbi இறங்கும் rate குறைகிறது. அடுத்து ஏறுமோ?
Rate this:
Cancel
Ramanathan Muthiah - Madras,இந்தியா
24-ஜூன்-202119:46:57 IST Report Abuse
Ramanathan Muthiah முற்றிலும் பொய் தினமும் மூன்று மடங்கு அதிகமாக தான் இருக்கும் 6162.3. (சென்னையில் மட்டும் குறைந்தது 10000. கொரோன கேஸ்கள் இருக்கும்) மடங்கு கூட்டி பாருங்கள் மக்களே. இந்த ஆட்சி வந்த நாள் முதல், அதிலும் நம் சுகாததுறை அமைச்சர் "ஜோக்கர்" இருக்காரே....ஒரே காமெடி தான் போங்க பாதி பேர் வீட்டில் தனிமையில் இருக்கிறார்கள், அவர்கள் வெளியே வந்தால் தான் தெரியும் எவ்வளவு என்று? அதற்காக முந்தைய ஆட்சி மற்றும் சரி என்று சொல்லவில்லை, அவர்களும் நிறைய திணறி தான் கட்டுக்குள் கொரோனாவை வைத்திருந்தார்கள். இவ்வளவு சாவு இல்லை. கோயம்பேடு மார்கெட்டினால் தான் தொற்று பரவியது தவிர மற்ற படி கொரோனா கொஞ்சம் கற்றுக்கொள் இருந்தது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X