சீனா-திபெத்-ஐ இணைக்கும் பிரம்மாண்ட திட்டம் துவக்கம் | Dinamalar

சீனா-திபெத்-ஐ இணைக்கும் பிரம்மாண்ட திட்டம் துவக்கம்

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (7)
Share
லாசா: வரும் ஜூலை 1-ஆம் தேதி சீன கம்யூனிச கட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை அடுத்து சீன கம்யூனிச அரசு, தங்கள் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இதனை பிரம்மாண்டமாகக் கொண்டாட முடிவு எடுத்துள்ளது. இந்த விழாவை அடுத்து சீனாவுக்குள் ஏதாவது ஒரு பிரம்மாண்ட திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட முடிவெடுத்தது. சீனாவில்

லாசா: வரும் ஜூலை 1-ஆம் தேதி சீன கம்யூனிச கட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை அடுத்து சீன கம்யூனிச அரசு, தங்கள் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இதனை பிரம்மாண்டமாகக் கொண்டாட முடிவு எடுத்துள்ளது.



latest tamil news



இந்த விழாவை அடுத்து சீனாவுக்குள் ஏதாவது ஒரு பிரம்மாண்ட திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட முடிவெடுத்தது. சீனாவில் கட்டுப்படுத்தப்படும் திபெத் பகுதியின் தலைநகர் லாசாவில் இருந்து மிஞ்சி நகரத்துக்கு அதிவேக மின்சார ரயில் சேவை துவக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.

விரைவில் இந்தத் திட்டத்தை துவக்கிவைத்து அதற்கு அடிக்கல் நாட்டவுள்ளது. திபெத் மலைகள் சூழ்ந்த பகுதி. இங்கு அமைக்கப்படும் முதல் மின்சார ரயில் வழித்தடம் இதுவேயாகும். இந்த ரயில் வழித்தடம் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை ஒட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திபெத்தில் உள்ள பாய் நகராட்சிக்கு அருகே இந்த வழித்தடம் அமைந்துள்ளது. நீண்ட காலமாக இந்த ரயில் தடம் உருவாக்க சீன அரசு திட்டமிட்டு வந்தது. திபெத் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தவும் திபெத்தில் இருந்து சீனாவுக்குள் எளிதில் மக்கள் பயணிக்கவும் இந்த ரயில்வே வழித்தடம் உதவியாக இருக்கும் என சீன அரசு கருதுகிறது.


latest tamil news



இந்த வழித்தடத்தில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக மின்சார ரயில் இயக்கப்படும். 435 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில்வே வழித்தடம் 47 மலை குகைகள், 120 பாலங்கள் ஆகியவற்றை கடந்துசெல்லும் என திபெத் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக 4.8 மில்லியன் அமெரிக்க டாலர் (31.2 பில்லியன் யுவான்) நிதியை சீனா ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X