சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

எப்படி சமாளிப்பது?

Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
எப்படி சமாளிப்பது?'தெலுங்கானாவில் நல்லாட்சி அமைப்பதே எங்கள் நோக்கம்' என்ற கோஷத்துடன் களத்தில் இறங்கியுள்ள ஒய்.எஸ்.ஷர்மிளாவை மிரட்சியுடன் பார்க்கின்றனர் அந்த மாநில மக்களும், அரசியல்வாதிகளும். இந்த ஷர்மிளா, ஆந்திர முன்னாள் முதல்வர், மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகள். தற்போதைய ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி.

 அக்கம் பக்கம்


எப்படி சமாளிப்பது?



'தெலுங்கானாவில் நல்லாட்சி அமைப்பதே எங்கள் நோக்கம்' என்ற கோஷத்துடன் களத்தில் இறங்கியுள்ள ஒய்.எஸ்.ஷர்மிளாவை மிரட்சியுடன் பார்க்கின்றனர் அந்த மாநில மக்களும், அரசியல்வாதிகளும். இந்த ஷர்மிளா, ஆந்திர முன்னாள் முதல்வர், மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகள். தற்போதைய ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி. ஆந்திராவில் தன் சகோதரர் ஜெகனை முதல்வராக்குவதற்கு கடுமையாக உழைத்தார் ஷர்மிளா. ஜெகன் முதல்வராகியதும், ஷர்மிளாவை கழற்றி விட்டார். ஆனாலும் அவருக்கு அரசியல் ஆசை அடங்கவில்லை. அண்டை மாநிலமான தெலுங்கானாவில் முகாமிட்டுள்ள அவர், ஒய்.எஸ்.தெலுங்கானா என்ற பெயரில், புதிய கட்சியை துவக்கியுள்ளார். மக்களை கவர்வதற்காக மாநிலம் தழுவிய பாத யாத்திரையை துவக்கவும் தயாராகி வருகிறார். பாத யாத்திரை அரசியல் வாயிலாக தான், அவரது தந்தையும், சகோதரரும் ஆட்சிக்கு வந்தனர்; தற்போது, அதே பாணியை பின்பற்ற முடிவு
செய்துள்ளார் ஷர்மிளா. வரும் 2023ல், தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஷர்மிளாவின் இந்த திடீர் வருகை, முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவுக்கு தலைவலியை
ஏற்படுத்தி உள்ளது.'என் நிம்மதியை கெடுப்பதற்கென்றே இந்த பெண், ஆந்திராவிலிருந்து கிளம்பி வந்துள்ளது; இதை எப்படி சமாளிப்பது என தெரியவில்லையே' என, தீவிர
யோசனையில் ஆழ்ந்துள்ளார் சந்திரசேகர ராவ்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
25-ஜூன்-202114:05:24 IST Report Abuse
mathimandhiri மூலம் தற்போது இத்தாலி வசம் இருக்கும் காங்///. வார பரம்பரை நோக்கம் இல்லா விட்டால் தான் அதிசயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X