ஆந்திராவில் 10, 12ம் வகுப்பு பொது தேர்வு ரத்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆந்திராவில் 10, 12ம் வகுப்பு பொது தேர்வு ரத்து

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021
Share
அமராவதி: ஆந்திரா மாநிலத்திலும் 10, மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பயிலும் 12 -ம் வகுப்பு மாணவர்களின் தேர்வை ரத்து செய்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண்

அமராவதி: ஆந்திரா மாநிலத்திலும் 10, மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



latest tamil news



இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பயிலும் 12 -ம் வகுப்பு மாணவர்களின் தேர்வை ரத்து செய்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்காக வல்லுநர்கள் குழு ஒன்றை நியமித்தது.


latest tamil news



மத்திய அரசை பின்பற்றி, தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்தது. அதே நேரத்தில் ஆந்திர மாநில அரசு 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 10, மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்து உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X