இதே நாளில் அன்று| Dinamalar

இதே நாளில் அன்று

Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (1)
Share
ஜூன் 25, 1900இங்கிலாந்து நாட்டின் விண்ட்சர் என்ற இடத்தில், 1900 ஜூன் 25ம் தேதி பிறந்தவர், லுாயி பிரான்சிஸ் ஆல்பர்ட் விக்டர் நிக்கோலஸ் ஜார்ஜ் மவுன்ட் பேட்டன். கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லுாரியில் பொறியியல் பயின்றார். பிரிட்டிஷ் கடற்படையில் சேர்ந்து, படிப்படியாக முன்னேறி, கேப்டன் பதவியை அடைந்தார்.கடந்த 1947-ல், இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். இங்கிருந்து


இதே நாளில் அன்று


ஜூன் 25, 1900



இங்கிலாந்து நாட்டின் விண்ட்சர் என்ற இடத்தில், 1900 ஜூன் 25ம் தேதி பிறந்தவர், லுாயி பிரான்சிஸ் ஆல்பர்ட் விக்டர் நிக்கோலஸ் ஜார்ஜ் மவுன்ட் பேட்டன். கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லுாரியில் பொறியியல் பயின்றார். பிரிட்டிஷ் கடற்படையில் சேர்ந்து, படிப்படியாக முன்னேறி, கேப்டன் பதவியை அடைந்தார்.
கடந்த 1947-ல், இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். இங்கிருந்து ஆங்கிலேயர்கள் சுமுகமாக வெளியேறுவதற்கும், இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு சுதந்திர நாடுகளாக பிரிப்பதற்குமான விவகாரங்களை திறமையுடன் கையாண்டார். 1948 ஜூன் வரை, சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பணியாற்றினார்.அதன் பின், இங்கிலாந்து திரும்பியவர், கப்பற்படையில் கமாண்டராக பணியாற்றினார். 1979 ஆக., 27ல், அயர்லாந்தில் நடந்த குண்டு வெடிப்பில், 79வது வயதில் பலியானார்.பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான ஜார்ஜ் மவுன்ட் பேட்டன் பிறந்த தினம் இன்று!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X