பொது செய்தி

தமிழ்நாடு

குப்பைக்கிடங்கு இடம் மாறுமா? குடியிருப்பு மக்கள் வலியுறுத்தல்

Added : ஜூன் 24, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலையில் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள குப்பைக்கிடங்கை, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஆனைமலை பேரூராட்சியில், 18 வார்டுகளில், 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மாசாணியம்மன் கோவில், வணிக கடைகள், ஓட்டல்கள், குடியிருப்புகளில் இருந்து தினமும், ஐந்து டன் அளவுக்கு குப்பை

ஆனைமலை:ஆனைமலையில் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள குப்பைக்கிடங்கை, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஆனைமலை பேரூராட்சியில், 18 வார்டுகளில், 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மாசாணியம்மன் கோவில், வணிக கடைகள், ஓட்டல்கள், குடியிருப்புகளில் இருந்து தினமும், ஐந்து டன் அளவுக்கு குப்பை சேகரிக்கின்றனர்.இந்த கழிவுகளை, சின்னப்பம்பாளையம் செல்லும் வழியில், குடியிருப்புகளுக்கு மத்தியிலுள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று உரம் தயாரிக்கின்றனர். குப்பை கிடங்கை சுற்றிலும், 200க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. குப்பை கிடங்கில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.மழைக்காலத்தில் குப்பைக்கிடங்கில் இருந்து மழைநீருடன், குப்பையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குடியிருப்பு பகுதிக்குள் வருவதால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.இந்நிலையில், குப்பைக்கிடங்கை உடனடியாக வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, பேரூராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டருக்கு மக்கள் மனு அனுப்பியுள்ளனர். இடமாற்றம் செய்ய தாமதப்படுத்தினால், போராட்டம் நடத்துவோம் என, குடியிருப்பு பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X