கோலார்பட்டி ஜி.எச்.,ல் தடுப்பூசி போட கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோலார்பட்டி ஜி.எச்.,ல் தடுப்பூசி போட கோரிக்கை

Added : ஜூன் 24, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கோலார்பட்டி அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும், என, தெற்கு ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கவுன்சில் கூட்டம், அம்மா திருமண மண்டபத்தில் செயல்படும் தற்காலிக ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, ஒன்றிய தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் செந்தில்குமார்,
 கோலார்பட்டி ஜி.எச்.,ல் தடுப்பூசி போட கோரிக்கை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கோலார்பட்டி அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும், என, தெற்கு ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய கவுன்சில் கூட்டம், அம்மா திருமண மண்டபத்தில் செயல்படும் தற்காலிக ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, ஒன்றிய தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் பேசியதாவது:கொரோனா பரவல் அதிகமுள்ள சூழலில், ஒன்றியத்துக்கு ஒரு வட்டார அளவிலான கொரோனா தடுப்பு மையம் செயல்படுகிறது. அதை, தடுப்பூசி போடும் முகாமாக பயன்படுத்தலாம். கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி முகாம்கள் செலயல்படுத்தி, அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும். தெற்கு ஒன்றியத்தில், கஞ்சம்பட்டி, ரெட்டியாரூர் இரணடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கோலார்பட்டி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படுவதில்லை. அங்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடும் தேதி குறித்து முன்கூட்டியே தெரிவித்தால், மக்கள் பயனடைய இயலும்.மானியம் என்னாச்சுவேளாண் துறையின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க, தெற்கு வேளாண் துறை வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி, அதில் ஒன்றிய கவுன்சிலர்களை இணைத்து, அனைத்து திட்டங்கள் குறித்தும் பதிவிட வேண்டும். தனிநபர் இல்லக்கழிப்பிடங்கள் அமைத்ததற்கு, மானிய பணம் பயனாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் கடந்தும் வழங்கவில்லை. ஒன்றிய அலுவலகத்தை அம்மா மண்டபத்துக்கு மாற்றிய தகவலை, ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கவில்லை. அலுவலக இடமாற்றத்துக்கு, 1.87 லட்சம் ரூபாய் செலவு கணக்கு காட்டியுள்ளதை ஏற்க முடியாது.இவ்வாறு, கவுன்சிலர்கள் பேசினர்.கலெக்டருக்கு கோரிக்கைஅதிகாரிகள் கூறியதாவது:தற்காலிக ஒன்றிய அலுவலகத்துக்கு, அம்மா மண்டபம் ஒதுக்குவது கடைசி நேரம் வரை உறுதியாகவில்லை. தேர்தல் நேரத்தில் அவசரமாக மாற்றப்பட்டது. பராமரிப்பின்றி இருந்த அம்மா மண்டப வளாகத்தை சுத்தம் செய்து, இடமாற்றம் செய்ய ஒருவாரம் அவகாசமானதால் செலவு அதிகமானது.கோலார்பட்டி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடவும், தடுப்பூசி முகாம்களை அதிகரிக்கவும், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்படும். தனிநபர் இல்லக்கழிப்பிட மானியம் பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் பதிலளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X