பொது செய்தி

தமிழ்நாடு

சிரவையாதீனத்தில் திருப்புகழ் இசை விழா

Added : ஜூன் 24, 2021
Share
Advertisement
கோவை சரவணம்பட்டியிலுள்ள சிரவையாதீனம் கவுமார மடாலயத்தில் நேற்று, திருப்புகழ் இசை விழா இணையம் வாயிலாக துவங்கியது. சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் பேசுகையில், ''திருப்புகழ் என்பது முருகக்கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய, ஒரு பக்தி நுாலாகும். திருப்புகழில் 1,307 இசைப்பாடல்கள் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.இதில் 1,088 சந்த வேறுபாடுகள் உள்ளன. இதில் அகத்தியரின்

கோவை சரவணம்பட்டியிலுள்ள சிரவையாதீனம் கவுமார மடாலயத்தில் நேற்று, திருப்புகழ் இசை விழா இணையம் வாயிலாக துவங்கியது.

சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் பேசுகையில், ''திருப்புகழ் என்பது முருகக்கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய, ஒரு பக்தி நுாலாகும். திருப்புகழில் 1,307 இசைப்பாடல்கள் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.இதில் 1,088 சந்த வேறுபாடுகள் உள்ளன. இதில் அகத்தியரின் கதையும், மனிதன் இருக்கும் காலத்தில் என்ன நிகழும், இறந்த பின்பு என்ன நிகழும், எப்படியெல்லாம் இன்பமும், துன்பமும் ஏற்படும் என்பது குறித்து சொல்லப்பட்டிருக்கிறது,''என்றார்.

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசினார். அருணகிரியின் அருள்நெறி குறித்து, மலேசிய முருக பக்திப் பேரவை நிர்வாகி டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன், திருப்புகழ் இன்னிசை குறித்து, சுகி நிகேதன் ஆர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த சிவா, திருமுருக ஜகன்னாதன் ஓதுவார் பேசினர். சிங்கப்பூர் சிவ லாவண்யா அருள் நிறைவுரை நிகழ்த்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X