யானையே வாங்கியாச்சு அங்குசத்துக்கு யோசிக்கலாமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

யானையே வாங்கியாச்சு அங்குசத்துக்கு யோசிக்கலாமா?

Added : ஜூன் 24, 2021
Share
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தாலுகாவில், வடசித்துார், சொக்கனுார் ஆரம்ப சுகாதார நிலையங்களும், நல்லட்டிபாளையத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிணத்துக்கடவில், 40 படுக்கைகளுடன் அரசு மருத்துவமனையும் செயல்படுகின்றன.இவற்றில், வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த ஓராண்டுக்கு முன், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. தற்போது, கொரோனா
 யானையே வாங்கியாச்சு அங்குசத்துக்கு யோசிக்கலாமா?

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தாலுகாவில், வடசித்துார், சொக்கனுார் ஆரம்ப சுகாதார நிலையங்களும், நல்லட்டிபாளையத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிணத்துக்கடவில், 40 படுக்கைகளுடன் அரசு மருத்துவமனையும் செயல்படுகின்றன.இவற்றில், வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த ஓராண்டுக்கு முன், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதனால், மருத்துவமனை வளாகத்தில், மக்கள் காத்திருக்கும் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் வசதி, பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளதால், ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து, பாதுகாப்பு வழங்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X