கோழிப்பண்ணையில் பசுமை சூழல்! வாய்ப்பு தந்தது வனத்துக்குள் திருப்பூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோழிப்பண்ணையில் பசுமை சூழல்! வாய்ப்பு தந்தது 'வனத்துக்குள் திருப்பூர்'

Added : ஜூன் 24, 2021
Share
உடுமலை:உடுமலை அருகே, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், கோழிப்பண்ணை வளாகத்தில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், 2015ல் துவங்கி, ஆறு கட்டங்களாக, 10.25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.நடப்பாண்டு, இத்திட்டத்தின் கீழ், 7 வது கட்டத்தில், 2 லட்சம் மரக்கன்றுகள் என்ற
 கோழிப்பண்ணையில் பசுமை சூழல்! வாய்ப்பு தந்தது 'வனத்துக்குள் திருப்பூர்'

உடுமலை:உடுமலை அருகே, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், கோழிப்பண்ணை வளாகத்தில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், 2015ல் துவங்கி, ஆறு கட்டங்களாக, 10.25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.நடப்பாண்டு, இத்திட்டத்தின் கீழ், 7 வது கட்டத்தில், 2 லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.உடுமலை பகுதிகளில், விவசாயிகள், பசுமை அமைப்புகள் ஆர்வம் காரணமாக, நிலம் பதிவு மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.உடுமலை செல்லப்பம்பாளையம், செந்தில்குமாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை வளாகத்தில், தேக்கு, புங்கன், சொர்க்கம், செம்மரம், மகிழம், தான்றிக்காய் என, 262 மரக்கன்றுகள் நேற்றுமுன்தினம் நடப்பட்டது.பசுமை சூழ்ந்த கோழிப்பண்ணையாக மாறும் போது, வெப்பநிலை குறையும்; இயற்கையான முறையில், கோழிகளுக்கு அருமையான சீதோஷ்ண நிலை உருவாக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் காக்கப்படும், என்பதால், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மரக்கன்று நட ஆர்வம் காட்டி வருகின்றனர்.திட்ட குழுவினர் கூறுகையில், 'வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட நிலங்கள், விவசாயம் மேற்கொள்ளாமல் வீணாக உள்ள உள்ள நிலங்கள், மானாவாரி நிலங்கள், மரச்சாகுபடி திட்டமாக வருவாய் பெருக்கும் வகையில் விவசாயிகள் விருப்பத்திற்கு ஏற்ப இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படும். திட்ட கள அலுவலரை, 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X