தடுப்பூசி தயக்கத்தை போக்குவோம்: சோனியா பேச்சு

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி ; 'நாடு முழுதும் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வும், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கத்தை போக்கவும், காங்கிரஸ் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்' என, அக்கட்சியின் தலைவர் சோனியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாநில பொதுச் செயலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று
தடுப்பூசி,  சோனியா, காங்கிரஸ், காங்., சோனியா காந்தி

புதுடில்லி ; 'நாடு முழுதும் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வும், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கத்தை போக்கவும், காங்கிரஸ் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்' என, அக்கட்சியின் தலைவர் சோனியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாநில பொதுச் செயலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.
இதில், அக்கட்சியின் தலைவர் சோனியா பேசியதாவது:நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை காங்., தலைவர்கள் உறுதி செய்யவேண்டும். தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தடுப்பூசி கிடைக்க வழி செய்ய வேண்டும். நாடு தழுவிய அளவில் தடுப்பூசி போடும் பணிகள் வேகப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான், இந்த ஆண்டு இறுதிக்குள் 75 சதவீத மக்கள் முழுதுமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.

தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஏற்படும் தயக்கத்தை களையவும், தடுப்பு மருந்துகள் வீணாவதை குறைக்கவும் நம் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். இதற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இன்னும் சில மாதங்களில் உருவாகும் மூன்றாவது அலை, குழந்தைகளை பாதிக்கும் என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இரண்டாவது அலையின் போது பாதிப்புகளும், உயிரிழப்புகளும் கடுமையாக அதிகரித்ததை போல, மூன்றாவது அலையில் ஏற்பட்டு விடாமல் தடுக்க, நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கொரோனா மேலாண்மை குறித்து, காங்., வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை, அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து, மக்களை சென்றடைய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
25-ஜூன்-202121:52:39 IST Report Abuse
S. Narayanan நாட்டை எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து விட்டு இப்போது நடிக்கிறாங்க
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
25-ஜூன்-202120:01:48 IST Report Abuse
sankaseshan கோவேர்ந்மேன்ட் எல்லாத்தையும் சரியாத்தான் செய்யறாங்க நீங்க வாயை மூடி கொண்டிருந் தா போறும் .
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
25-ஜூன்-202118:25:58 IST Report Abuse
Desi நீங்களும் பப்புவும் போட்டாச்சா? இங்கேயா ? இத்தாலியிலா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X