பொது செய்தி

தமிழ்நாடு

எமிஸ் இணையத்தில் புரோமோஷன்; மாணவர்கள் நிலை உயர்வு

Added : ஜூன் 24, 2021
Share
Advertisement
உடுமலை:பள்ளிகளில், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, எமிஸ் இணையதளத்தில் புரோமோஷன் செய்து, மாணவர்களை நிலை உயர்த்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது.கொரோனாவால் பள்ளிகள் மூடியிருந்தாலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பதிவு நடக்கிறது.தலைமையாசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு

உடுமலை:பள்ளிகளில், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, எமிஸ் இணையதளத்தில் புரோமோஷன் செய்து, மாணவர்களை நிலை உயர்த்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது.கொரோனாவால் பள்ளிகள் மூடியிருந்தாலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பதிவு நடக்கிறது.தலைமையாசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வருகை புரிகின்றனர். மாணவர் சேர்க்கை காரணமாக, வகுப்பு ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பணிபுரிந்தும் வருகின்றனர்.அதேநேரம், 2021-22ம் கல்வி ஆண்டிற்கு, அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, எமிஸ் இணையதளத்தில் புரோமோஷன் செய்து, நிலை உயர்த்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது.
ஆசிரியர்கள் கூறியதாவது:மாணவர்கள், தேர்வின்றி தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர்களை, புரோமோஷன் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக எமிஸ் இணையதளம் பயன்படுத்தப்படுகிறது.எவரேனும், வேறு பள்ளிகளில் பயில்வதற்காக மாற்றுச்சான்றிதழ் கோரினால், மாணவர்களின் எமிஸ் பதிவில் இருந்து, பள்ளியின் குறியீடு நீக்கப்படும். பின், அதன் நகலுடன் இணைத்து, மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படும்.சேர்க்கையின் போது, புதிய பள்ளியின் குறியீடு எமிஸ் எண்ணில் பதிவேற்றம் செய்யப்படும். இதற்கான பணிகள், தினமும் தீவிரமாக நடந்து வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X