பொது செய்தி

இந்தியா

போலி கணக்குகளை முடக்க வலைதளங்களுக்கு கெடு

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி :'சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் குறித்து, சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்கள் சார்பாகவோ புகார் அளிக்கப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் அந்த போலி கணக்குகள் முடக்கப்பட வேண்டும்' என, புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.சமூக வலைதளங்கள் வாயிலாக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள், பண மோசடிகள், தேச விரோத நடவடிக்கைகளை கட்டுப் படுத்த
போலி கணக்குகள், வலைதளங்கள்,  கெடு

புதுடில்லி :'சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் குறித்து, சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்கள் சார்பாகவோ புகார் அளிக்கப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் அந்த போலி கணக்குகள் முடக்கப்பட வேண்டும்' என, புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்கள் வாயிலாக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள், பண மோசடிகள், தேச விரோத நடவடிக்கைகளை கட்டுப் படுத்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை, மத்திய அரசு சமீபத்தில் நடைமுறைப்படுத்தியது.

'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யுடியூப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உட்பட கோடிக்கணக்கான மக்கள் தங்கள் பெயரில் கணக்குகள் வைத்துள்ளனர்.பிரபலங்களின் கணக்கு களில் இருந்து புகைப்படங்களை எடுத்து, அவர்கள் பெயரில் போலியான கணக்குகளை துவங்கும் போக்கு பரவலாக உள்ளன.குறிப்பிட்ட பிரபலங் களின் சமூக வலைதள கணக்கு என தவறாக நினைத்து, அதை பலர் பின்தொடர்வதும் நடக்கிறது.

சாமானியர்களின் புகைப்படங்களை திருடி, அவர்கள் பெயரில் போலி கணக்குகள் துவங்கி, அவர்களின் நண்பர்கள் வட்டத்தில் பணம் கேட்டு மோசடி செய்யும் போக்குகளும், சமீபநாட்களாக அதிகரித்து உள்ளன.இதற்கு முடிவுகட்டும் விதமாக, தகவல் தொழில்நுட்ப விதிகளில் புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.'சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பயனாளர்களின் பெயர்களில் துவங்கப்படும் போலி கணக்குகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால், 24 மணி நேரத்திற்குள் அந்த போலி கணக்குகள் முடக்கப்பட வேண்டும்' என, அந்த
உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
25-ஜூன்-202110:21:33 IST Report Abuse
blocked user அருமை. முகம் தெரியாத முகநூல் கணக்குகளை தூக்கினால் திமுக திரானியற்ற கட்சியாகிவிடும். டூல்கிட் வேலை செய்யாது...
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
25-ஜூன்-202106:34:09 IST Report Abuse
 N.Purushothaman தமிழகத்தில் சினிமா நடிகர் செந்தில் கூட இப்படி ஒரு புகார் கொடுத்து உள்ளார் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X