அரசியல் செய்தி

தமிழ்நாடு

இ.பி.எஸ்., அலட்சியத்தால் கொரோனா அதிகரிப்பு

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
சென்னை :''முதல்வராக இருந்த இ.பி.எஸ்.,சின் அலட்சியம் காரணமாகத்தான் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தது,'' என, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சட்டசபையில், முதல்வர் பேசியதாவது:கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வரக்கூடாது; வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி இன்றைய அரசுக்கு இருக்கிறது. அரசு எடுத்த நடவடிக்கைகளால் தொற்று குறைந்தது.ஆனால், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.,
இ.பி.எஸ்., அலட்சியம்,கொரோனா அதிகரிப்பு , ஸ்டாலின்

சென்னை :''முதல்வராக இருந்த இ.பி.எஸ்.,சின் அலட்சியம் காரணமாகத்தான் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தது,'' என, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

சட்டசபையில், முதல்வர் பேசியதாவது:கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வரக்கூடாது; வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி இன்றைய அரசுக்கு இருக்கிறது. அரசு எடுத்த நடவடிக்கைகளால் தொற்று குறைந்தது.ஆனால், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., தங்கள் ஆட்சியில் அதிகபட்சமாக 7,000 பேர் மட்டும் பாதிக்கப்பட்டதாகவும், தி.மு.க., ஆட்சியில் 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாகவும் கூறிஉள்ளார்.


ஆலோசனை



பிப்., 26ல் தேர்தல் அறிவிக்கப்பட்டதை வைத்து, இப்படி சொல்கிறார். மே 6 வரை முதல்வராக அவர் தான் இருந்தார். நேற்று முன்தினம் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளுடன் தன் கடமையும், பொறுப்பும் முடிந்ததைப் போல் பேசினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், அன்றைய முதல்வர் எந்த அரசுப் பணியையும் பார்க்கவில்லையா என்பது தான் என் கேள்வி. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, ஏப்., 12ல் மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன், அன்றைய முதல்வர் ஆலோசனை நடத்தி உள்ளார்.ஏப்ரலில் அன்றைய முதல்வர் மேற்பார்வையில் தான், பணிகள் முழுமையாக நடந்துஉள்ளன. ஆனால், கொரோனா கட்டுப்படுத்தப்படவில்லை. மே 2ல் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அன்றைய தினம், 19 ஆயிரத்து 588 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதற்கு, முந்தைய அ.தி.மு.க., அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.கொரோனாவை அ.தி.மு.க., அரசு கட்டுப்படுத்தி விட்டது என்ற வாதம் மிகவும் தவறு. அன்றைய முதல்வரை யாராவது கொரோனா தடுப்புப் பணியில்
ஈடுபடக் கூடாது என, கையை கட்டி போட்டு வைத்திருந்தனரா எனத் தெரியவில்லை.பிப்., 26 முதல் மே 6 வரையிலான இரண்டு மாத ஆட்சியை, அ.தி.மு.க., மறந்து விட்டதா? ஆட்சிக்கு வரப் போவதில்லை என தெரிந்து, அலட்சியமாக இருந்ததன் விளைவு தான், பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரம் எனக் கூடியது.


முற்றுப்புள்ளி



இத்தகைய மோசமான சூழலை கட்டுப்படுத்தியது தான் தி.மு.க., அரசின் சாதனை. கொரோனா என்பது அரசியல் பிரச்னையோ, கட்சி பிரச்னையோ, ஆட்சியின் பிரச்னையோ அல்ல; மக்கள் நலன் சார்ந்த பிரச்னை.எதிர்க்கட்சி தலைவர் பேசுகையில், 'அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும்' என்றார். அதற்காக அவருக்கு நன்றி. அனைவரும் சேர்ந்து செயல்பட்டு, அனைத்து தரப்பினரின் ஆலோசனையையும் பெற்று, கொரோனாவுக்கு முழுமையான முற்றுப்புள்ளியை இந்த அரசு வைக்கும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.


'நாங்கள் அலட்சியமாக இருக்கவில்லை'



முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., பேசியதாவது: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தொற்று அதிகரித்தபோது, 'தொற்றை கட்டுப்படுத்த வேண்டும்; அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த அனுமதி தாருங்கள்' என தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினேன். அவர்கள் அனுமதி தரவில்லை. பதிலை கூட, தலைமைச் செயலருக்குத்தான் அனுப்பினர்.

நான் அலட்சியத்தோடு நடந்ததாக முதல்வர் தெரிவித்தார். அது தவறான தகவல். ஒரு மாதத்திற்கு பின், தேர்தல் முடிந்ததும் மீண்டும் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினேன். அனுமதி பெற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. அனைத்து கட்சி கூட்டம் கூட்டினேன்; தி.மு.க.,வும் பங்கேற்றது. தனியார் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு இ.பி.எஸ்., தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ''தேர்தல் முடிந்த பின், தலைமைச் செயலர் எழுதிய கடிதம், அதற்கு தேர்தல் கமிஷன் மறுநாளே ஒப்புதல் அளித்தது போன்றவை உள்ளன. நான் குற்றச்சாட்டாக கூறவில்லை. நீங்கள் முதல்வராக இருந்தீர்கள். அப்போது, நோய் தொற்று அதிகரித்ததைத் தான் கூறுகிறேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
25-ஜூன்-202122:23:02 IST Report Abuse
ஊழல் விஞ்ஞானி ஆராயிரத்தில் வைத்திருந்தவர் அவர்......அறுபதாயிரம் வரை பரப்பியவர் இவர்........ஆடத்தெரியாதவள் வீணி கோனை என்றாலாம்......
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
25-ஜூன்-202122:05:20 IST Report Abuse
S. Narayanan அ தி மு க. ஆட்சி காலத்தில் கொரானா கட்டுக்குள் இறந்தது. ஸ்டாலின் ஊர் ஊர் என்று சுற்றி நோயை பரப்பி விட்டார் என்பது தான் உண்மை.
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
25-ஜூன்-202120:50:46 IST Report Abuse
Nagercoil Suresh தெரிந்துவைத்துக்கொண்டு வீண் பழிபோட முயல்பவர்கள் இப்படி தான் மாட்டுவார்கள், தற்போதய அரசு சிறப்பாக செயல்படுகிறது, மனம் இருந்தால் பாராட்டலாம் குறை இருந்தால் சுட்டிக்காட்டலாம் அதை விட்டுவிட்டு வீண் பழிகளைப்போட்டு மக்களை ஏமாத்த நினைப்பது கொரோனாவை விட மோசமான செயல், எதிர் கட்சி தலைவர் உண்மையை கூற முயற்சிக்கவேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X