சரத் பவாருடன் கைகோர்க்க ராகுலுக்கு சிவசேனா அறிவுரை

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
மும்பை :'பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன், காங்கிரஸ் எம்.பி., ராகுல் கைகோர்க்க வேண்டும்' என, சிவசேனா அறிவுறுத்தி உள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில்
சரத் பவார், ராகுல் , சிவசேனா அறிவுரை

மும்பை :'பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன், காங்கிரஸ் எம்.பி., ராகுல் கைகோர்க்க வேண்டும்' என, சிவசேனா அறிவுறுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம். இதற்கான முயற்சியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் எடுத்துள்ளார்.


latest tamil news


எதிர்க்கட்சிகளை பவாரால் ஒருங்கிணைக்க முடியும். ஆனால் தலைவர் யார் என்ற கேள்வி எழும். காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்கலாம் என்றால், அக்கட்சியே தலைவர் இல்லாமல் உள்ளது.

நாட்டின் நிலைமை, தன் கைகளை விட்டு போய்விட்டது என்பது பிரதமர் மோடிக்கு தெரியும். மக்கள் கோபமாக இருந்தாலும், தாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம் என, பா.ஜ., நம்புகிறது.எதிர்க்கட்சிகள் பலவீனமாகவும், ஒற்றுமையில்லாமல் இருப்பதும் தான் இதற்கு காரணம். மத்திய அரசையும், அதன் கொள்கைகளையும், 'டுவிட்டரில்' தொடர்ந்து விமர்சித்தால் போதும் என ராகுல் நினைக்கிறார்; அது தவறு.பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில், சரத் பவாருடன் ராகுல் கைகோர்க்க வேண்டும். அப்போது தான், பா.ஜ.,வுக்கு சவால் கொடுக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VSR -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூன்-202120:26:41 IST Report Abuse
VSR அய்யோ பாவம்: ஒரு மனுஷன வீழ்த்த எத்தனை பேர் முயற்சிக்கிறார்கள், இதுவே மோடியின் மாபெரும் வெற்றி. வங்காள புலி மம்தா ஆயிரம் கோடி தருவாராம் பிகார் பிராமணனுக்கு மோடிய எதிர்த்து வியூகம் தயார் செய்ய. மோடி இவ்வளவு காஸ்ட்லியான மனிதர் என்று ஒப்புக் கொள்கிறார். மேற்கு வங்கம் முழுவதும் ஏழ்மை நிறைந்துள்ளது. இருக்க இடம் உணவு தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த 1000 கோடிகளை செலவழியுங்கள் மம்தாஜி. உன்னுடைய சொந்த வெறுப்பின் காரணமாக மோடியை தோல்வி அடையச் செய்ய இவ்வளவு பெரிய தொகையை பிஹார் காரருக்கு கொடுக்கனுமா?
Rate this:
Cancel
kattus - chennai,இந்தியா
25-ஜூன்-202117:23:41 IST Report Abuse
kattus என்னடா இது திராவிடனுக்கு வந்த சோதனை
Rate this:
Cancel
senthil kumar kasinathan - mannargudi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூன்-202113:24:26 IST Report Abuse
senthil kumar kasinathan அப்போ சரத்பவார் அரசியல் வாழ்க்கையும் சீக்கிரம் முடுவுக்கு வந்துவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X