பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு சிகிச்சை மையங்கள் : 5 புதிய அறிவிப்புகள் வெளியீடு

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : 'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், தொடர் சிகிச்சை பெற, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும், சிறப்பு சிகிச்சை மையங்கள் துவக்கப்படும். நடப்பு நிதியாண்டில், 100 கோடி ரூபாய் செலவில், 100 கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்' என்பது உட்பட, ஐந்து புதிய அறிவிப்புகளை, நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.சட்டசபையில், கவர்னர்
சிறப்பு சிகிச்சை மையங்கள் : 5 புதிய அறிவிப்புகள் வெளியீடு

சென்னை : 'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், தொடர் சிகிச்சை பெற, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும், சிறப்பு சிகிச்சை மையங்கள் துவக்கப்படும்.

நடப்பு நிதியாண்டில், 100 கோடி ரூபாய் செலவில், 100 கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்' என்பது உட்பட, ஐந்து புதிய அறிவிப்புகளை, நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.சட்டசபையில், கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, அவர் பேசியபோது வெளியிட்ட அறிவிப்புகள்:கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ள, சில முக்கிய கருத்துகளுக்கு, செயல்வடிவம் கொடுக்கும் வகையில், சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.


1


கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளபோதும், அந்த தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு, சில பிரச்னைகள் வருவதாக, பலரும் தெரிவித்துள்ளனர். அவர்கள் தொடர் சிகிச்சை பெற, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும், சிறப்பு சிகிச்சை மையங்கள் துவக்கப்படும். தேவையான உயர் சிகிச்சை மருத்துவர்களோடு, இந்த மையங்கள் செயல்படும்.


2


வளர்ச்சியில் பின் தங்கியுள்ள, வட மாவட்டங்களில், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய, தொழிற்சாலைகள் அமைப்போம் என்று அறிவித்திருக்கிறோம். முதற்கட்டமாக, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், 12 ஆயிரம் பேருக்கும்; விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், 10 ஆயிரம் பேருக்கும், வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய, பெரும் தொழிற்சாலைகள் அமைய உள்ளன .
வழக்குகள் வாபஸ்:


3

கடந்த ஆட்சியில், கருத்து சுதந்திரத்துக்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள்; மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், மீத்தேன் - நியூட்ரினோ - கூடங்குளம் அணு உலை - சேலம் எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக, அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும்.


4கருணாநிதி கட்டிய 240 சமத்துவபுரங்கள், சரியாக பராமரிக்கப்படாத அவல நிலையில் உள்ளன; அவை உடனடியாக சீரமைக்கப்படும்; புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.


5தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கோவில்கள் புனரமைப்புக்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்ற வாக்குறுதி இருந்தது. அதற்கு முதற்கட்டமாக, இந்த நிதியாண்டில், 100 கோடி ரூபாய் செலவில், கோவில்களை தொன்மை மாறாமல் புதுப்பிக்க, திருக்குளங்களை சீரமைக்க, திருத்தேர்களை புதுப்பித்து திருவிழாக்கள் நடத்த தேவையான பணிகள், 100 கோவில்களில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.'


அனைத்து வழக்குகளும் ஆய்வு'கடந்த ஆட்சியில், அற வழியில் போராடியதற்காக போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சட்டசபையில் நடந்த விவாதம்:தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன்: தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். இதற்காக, 10 ஆண்டுகளாக, என் மீதும், வைகோ, திருமாவளவன் உட்பட பல்வேறு தலைவர்கள் மீதும், ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும்.முதல்வர்: இது தொடர்பாக ஆய்வு செய்து, வன்முறை வழக்குகள் தவிர்த்து, மற்ற வழக்குகளை முடிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.மா.கம்யூ., நாகை மாலி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய சில மாணவர்கள் மீது, வழக்குகள் உள்ளன. அவற்றை திரும்பப் பெற வேண்டும்.முதல்வர்: இது சட்டத்துறை ஆய்வில் உள்ளது. விரிவான அறிக்கை வந்ததும், நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும்.அறவழியில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குள் முடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவர். அனைத்து வழக்குகள் மீதும், ஆய்வுப்பணி நடந்து வருகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
25-ஜூன்-202110:46:34 IST Report Abuse
blocked user கோவில்களில் வரும் வருமானம் கோவில்களில் வேலை பார்க்கும் வெட்டி ஆபிசர்களுக்கே அதிகமாக செல்கிறது. அது போக கோவில்களில் முழு அளவில் கொள்ளை நடக்கிரது. கோவில் சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தை கோவில்களுக்கும் இந்துக்களுக்கும் செலவு செய்தாலே தமிழகத்தில் ஏழைகள் இருக்க மாட்டார்கள். தமிழகத்திலுள்ள புரதான கோவில்களைப்பொருத்தமட்டில் திராவிடர்கள் தலையெடுத்ததில் இருந்து எல்லாம் சர்வநாசமாகவே இருக்கிறது. சாராயக்கடை நடத்தி பொது மக்களை கொலை செய்யும் அரசு கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் என்பதையே உண்மையான ஓவ்வொரு இந்துவும் விரும்புவான்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
25-ஜூன்-202110:40:31 IST Report Abuse
blocked user சட்டப்படி வழக்குகளை எதிர் கொள்ளுவதை விட்டுவிட்டு தன்னை விடுவிக்க அதிகாரத்தை பயன்படுத்துவது தவறான முன்னுதாரணம். முதல்வரோ, பிரதமரோ, அவர்களும் சட்டத்துக்கு உட்ப்பட்டவர்களே.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25-ஜூன்-202104:29:53 IST Report Abuse
அசோக்ராஜ் மூன்றாவது அறிவிப்பு மட்டும்தான் அஜெண்டா. தனியா சொல்ல அவனுக்கே அசிங்கமா இருந்ததோ? மேலே ரெண்டு கீழே ரெண்டு சேர்த்து நடுவுல வெச்சுட்டான். காலிப்பசங்க வழக்கு பயம் இல்லாம மறுபடி தொடங்கலாம். திராவிஷம் வெல்க.
Rate this:
rajan - erode,இந்தியா
25-ஜூன்-202107:57:25 IST Report Abuse
rajanஆட்சியை விமரிசித்தால் தேசத்துரோக வழக்கு தொடருவது மோடி கொள்கை அதை உச்சநீதிமன்றம் வெகுவாக பாராட்டி தேசவிரோத செயல்கள் மட்டுமே வழக்கு தொடுக்க தகுதியுள்ளவர்கள் என்றது மற்றவை மக்கள்விரோதம் - உச்சநீதிமன்றம் கொரோனா விஷயத்தில் தலையிடக்கூடாது என்ற மோடி உச்சநீதிமன்றத்தின் துல்லிய தாக்குதலால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்கிறார் ஒரே நாடு ஒரே மருந்தது வெவ்வேறு விலை என்ற மோடியின் கொள்கை உச்சநீதிமண்டத்தின் துல்லிய தாக்குதலுக்கு பிறகு மருந்து கம்பெனிகளுடம் விலைகுறைப்பு குறித்து விவாதிப்பது ஏன் - இன்னும் பல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X