ஜம்மு - காஷ்மீருக்கு விரைவில் சட்டசபை தேர்தல்

Updated : ஜூன் 26, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடத்திய உயர்மட்ட கூட்டம் மூன்றரை மணி நேரம் நடந்தது. இதில், 'ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் தொகுதி வரையறை பணிகள் முடிவடைந்ததும் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும்' என, பிரதமர் உறுதி அளித்ததாக, கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் தெரிவித்தனர்.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு
ஜம்மு - காஷ்மீர், சட்டசபை தேர்தல், பிரதமர் , கூட்டம்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடத்திய உயர்மட்ட கூட்டம் மூன்றரை மணி நேரம் நடந்தது. இதில், 'ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் தொகுதி வரையறை பணிகள் முடிவடைந்ததும் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும்' என, பிரதமர் உறுதி அளித்ததாக, கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் தெரிவித்தனர்.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019 ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் பட்டன.இந்த நடவடிக்கைக்கு பின் முதல்முறையாக, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டது.


அழைப்புஇதையொட்டி டில்லியில் நேற்று நடந்த உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க, ஜம்மு - காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த பரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லா, காங்.,கை சேர்ந்த குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் துணை முதல்வர்களான காங்.,கின் தாரா சந்த், மக்கள் மாநாட்டு கட்சியின் முஸாபர் ஹுசைன் பாக், பா.ஜ.வை சேர்ந்த நிர்மல் சிங், கவிந்தர் குப்தா ஆகியோரும் பங்கேற்றனர்.மார்க்சிஸ்ட் கம்யூ., தலைவர் முகமது யூசுப் தரிகாமி, ஜம்மு - காஷ்மீர் அப்னி கட்சி தலைவர் அல்தாப் புகாரி, மக்கள் மாநாட்டு கட்சியின் சஜத் லோன், ஜம்மு - காஷ்மீர் காங்., தலைவர் ஜி.ஏ.மிர், பா.ஜ.,வின் ரவீந்தர் ரெய்னா ஆகியோரும் பங்கேற்றனர். மத்திய அரசு தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


வலியுறுத்தல்ஜம்மு - காஷ்மீரின் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடந்து முடிந்து, ஏழு மாதங்களுக்கு பின் நடந்த இந்த உயர்மட்ட கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.டில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில், நேற்று மாலை 3:00 மணிக்கு துவங்கிய கூட்டம், மூன்றரை மணி நேரம் நடந்தது. ஜம்மு - காஷ்மீரின் ஜனநாயக நடைமுறையை வலுவடைய செய்யும் பணிகளுக்கு கூட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.'ஜம்மு - காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதை போலவே, சட்டசபை தேர்தலையும் நடத்த வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்பான சூழலில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்' என, பிரதமர் மோடி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.கூட்டத்துக்கு பின், அதில் பங்கேற்ற மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் முஸாபர் ஹுசைன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கூட்டம் மிகவும் பயனுள்ளதாகவும் கண்ணியமாகவும், மரியாதைக்குரிய முறையிலும் நடத்தப்பட்டது. ஜம்மு - காஷ்மீரின் ஜனநாயகத்தை நிலைநாட்ட, அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என, பிரதமர் விடுத்த வேண்டுகோளை, அனைவரும் ஏற்றனர். ஜம்மு - காஷ்மீரை அமைதியான பகுதியாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்தார்.


கோரிக்கைஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை திரும்ப அளிக்க வேண்டும் என, அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை வைத்தனர். அனைத்து ரிக்கைகளையும் பிரதமர் கவனமாக கேட்டுக் கொண்டார்.ஜம்மு - காஷ்மீரில் சட்ட சபை தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. 'அங்கு, தொகுதி வரையறை பணிகள் முடிவடைந்ததும் விரைவில் தேர்தல் நடத்தப்படும்' என, பிரதமர் உறுதி அளித்தார். எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


வளர்ச்சிக்கு உறுதி!ஜம்மு - காஷ்மீரில் அனைத்து விதமான வளர்ச்சியையும் உறுதிப்படுத்த கடமைப்பட்டுஉள்ளோம். ஆலோசனை கூட்டம் மிக அமைதியாக, சுமுகமாக நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஜனநாயகம் மற்றும் அரசியல் சட்டம் மீதான தங்களின் உறுதியை வெளிப்படுத்தினர். அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,


அண்டை நாடுகள் நட்புறவுவெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:பாகிஸ்தான் உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புறவு இருப்பதையே இந்தியா விரும்புகிறது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு, தங்கள் நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என அளித்த உறுதியை பாகிஸ்தான் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


வன்முறை குறைந்தது ராணுவம் மகிழ்ச்சிவடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், ஹண்ட்வாரா பகுதியில், ராணுவம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற மூத்த ராணுவ அதிகாரி டி.பி.பாண்டே கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால் ஏற்படும் வன்முறை சம்பவங்கள் 50 சதவீதம் குறைந்துள்ளன. இங்கு அமைதியும், ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும் பெருகுவது எதிரிகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கொலைகளை நிகழ்த்துகின்றனர். இந்த சம்பவங்களை பயங்கரவாத தாக்குதலாக கருத முடியாது. எல்லைக்கு அப்பால் இருக்கும் எதிரிகளாலும், அமைதியை விரும்பாத சில உள்ளூர் நபர்களாலும் நிகழ்த்தப்படும் குற்ற செயலாகவே இதை கருத முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.


போராட்டம் தொடரும்!ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சட்ட ரீதியாக நாங்கள் நடத்தி வரும் போராட்டம் தொடரும். மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த, ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.பரூக் அப்துல்லாதலைவர், தேசிய மாநாட்டு கட்சி

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan - Homs,சிரியா
25-ஜூன்-202120:32:18 IST Report Abuse
Natarajan பரூக் அப்துல்லாவை இன்னும் ஒரு வருடம் வீட்டுக்காவலில் வைத்தால் எல்லாம் சரியாகிவிடும்
Rate this:
Cancel
Nachiar - toronto,கனடா
25-ஜூன்-202118:27:10 IST Report Abuse
Nachiar அந்நிய நாட்டு ஆக்கிரமிப்புகளாலும் ஊடுருவல்களாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பகுதிகளை, சிறப்பாக கடல் சார் பிரதேசங்களை நாட்டின் பாதுகாப்பிற்காக நேரடியான மத்திய அரசின் கண்காணிப்புக்குள் கொண்டுவரவேண்டும், காலம் தாழ்த்தாமல்.
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
25-ஜூன்-202113:29:54 IST Report Abuse
Ellamman மாநில சுயாட்சிக்கு எப்போதும் துணை நின்ற, சமூக நீதி காத்த வி பி சிங் பிறந்த நாளை கொண்டாடுவோம். அவர் நினைவை போற்றுவோம்.
Rate this:
25-ஜூன்-202122:52:00 IST Report Abuse
இந்தியா வாழ்கவி.பி சிங் காலத்தில் இருந்து தான் காஷ்மீரில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X