ராணா நாடு கடத்தல்: இன்று விசாரணை

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021
Share
Advertisement
வாஷிங்டன் : மும்பை தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாதி தகவூர் ராணாவை, 59, இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் விசாரணை துவங்கியுள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, 35 ஆண்டு சிறை தண்டனை
Tahawwur Rana, Mumbai terror attack, US court

வாஷிங்டன் : மும்பை தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாதி தகவூர் ராணாவை, 59, இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் விசாரணை துவங்கியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.


latest tamil news



அவரது நண்பரும், தாக்கு தல் திட்டத்துக்கு உதவியவருமான கனடா தொழிலதிபர் தகவூர் ராணாவை நாடு கடத்தும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு அமெரிக்காவில் அவர் கைது செய்யப்பட்டார்.அவரை நாடு கடத்தக் கோரிய மத்திய அரசின் கோரிக்கையை ஏற்பது தொடர்பாக, லாஸ் ஏஞ்சலஸ் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. நீதிபதி அறையில் இந்த விசாரணை, இந்திய நேரப்படி இன்று அதிகாலை துவங்குகிறது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X