அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: சொல் புத்திக்காரர் ஸ்டாலின்!

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (119)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:சொல் புத்திக்காரர், சுய புத்திக்காரர் என, மனிதர்களில் இரு வகை உண்டு. முதல்வர் ஸ்டாலின், சொல் புத்திக்காரர் போலும். எதற்கெடுத்தாலும் நாலு பேரை கேட்டு தான் முடிவெடுக்கிறார்.பத்து ஆண்டுகளுக்கு முன் கைமாறி போன
CM Stalin, Stalin, MK Stalin, DMK, ஸ்டாலின்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சொல் புத்திக்காரர், சுய புத்திக்காரர் என, மனிதர்களில் இரு வகை உண்டு. முதல்வர் ஸ்டாலின், சொல் புத்திக்காரர் போலும். எதற்கெடுத்தாலும் நாலு பேரை கேட்டு தான் முடிவெடுக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முன் கைமாறி போன தமிழக ஆட்சி கட்டிலை பிடிக்க, 300 கோடி ரூபாய் செலவு செய்து, பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை பெற்றார். அவர் புண்ணியத்தில் வெற்றிபெற்று, ஆட்சியையும் பிடித்தார். ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின், ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆலோசனை பெற, அவருக்கு குழு தேவைப்படுகிறது. ஒவ்வொரு துறைக்கும் ஒரு அமைச்சர்; உயர்மட்ட அதிகாரிகள் இருக்கும் போதிலும், ஆலோசனைக்காக குழு அமைப்பது ஏன்?


latest tamil news


அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளின் திறமையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. அதிருப்தி என்ற ஐயப்பாட்டை தோற்றுவிக்கிறது. சாத்தியமில்லை என்ற போதும், 'நீட் தேர்வை ரத்து செய்வோம்' என, தி.மு.க., ஏன் அறிக்கை வெளியிட வேண்டும்? ஆட்சியில் அமர்ந்ததும், நீட் தேர்வின் பாதிப்பை அளவிட ஒரு குழு அமைத்திருப்பது ஏன்? என்ன தான் இந்த குழு அலசி ஆராய்ந்து தன் அறிக்கையை சமர்ப்பித்தாலும், அதனால் ஒரு பயனும் இல்லை என்பது வெள்ளிடைமலை.

பின் எதற்காக இந்த குழு என்றால், 'நீட் தேர்வு ரத்து என்னாச்சு?' என கேள்வி கேட்போரின் வாயை சிறிது காலத்துக்கு மூடி வைப்பதற்கு தான். அடுத்து, முதல்வருக்கு பொருளாதார ஆலோசனை கூற, ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒருவரின் திறமை மீது நம்பிக்கை இல்லை என்றால், அவருக்கு ஏன் நிதியமைச்சர் பொறுப்பை கொடுக்க வேண்டும்? ஏற்கனவே, பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில், மாநில வளர்ச்சி கொள்கை குழு இருக்கிறது. தற்போது, இந்த ஐவர் குழுவுக்கு என்ன அவசியம் வந்தது?


latest tamil news


தமிழகத்தில் உள்ள பொருளாதார வீழ்ச்சியை, இந்த குழு சரிசெய்ய போகிறதாம்; நல்ல வேடிக்கை! தமிழகத்தின் மீது, 6 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளது. அதனால் தான் பல தொழிலதிபர்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரவில்லை. தமிழகத்தின் கடன் சுமைக்கு, அ.தி.மு.க., மட்டுமல்ல, தி.மு.க.,வும் தான் காரணம்.லஞ்சமும், ஊழலும் தலை விரித்தாடும் நிலையில், எந்த குழு வந்தாலும் பொருளாதாரத்தை சீர்செய்ய முடியாது. எனவே, எதற்கெடுத்தாலும் குழு அமைப்பதை விடுத்து, துறை சார்ந்த அறிவுள்ள நபர்களை, அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (119)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
26-ஜூன்-202112:32:53 IST Report Abuse
மனிதன் ஆமாம் ஒரு சுய புத்திக்காரர், தான்தோன்றித்தனமாக தனக்கு தோன்றியதை எல்லாம் சட்டமாக போட்டு, நாட்டையும்,நாட்டு மக்களையும், நாட்டின் பொருதாரத்தையும் அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றதுபோல, ஸ்டாலினும் செய்யவேண்டும் என்று எதிர்பார்கிறீர்களா?... தனக்கு அனுபவமில்லை என்பதையும், அதனால் எதையும் படித்த நான்குபேருடன் அமர்ந்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று செயல்படுவதே சிறந்தது என்பதையும் அவர் உணர்ந்தே இருக்கிறார்...இது இரண்டில் எது சிறந்தது என்று சுயபுத்தி உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்...ஆகவே எதையும் காமாலை கண்கொண்டு நோக்காதீர்...
Rate this:
Cancel
akn -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூன்-202103:06:42 IST Report Abuse
akn yes
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202102:56:03 IST Report Abuse
Sankar Ramu தலைமை அமைச்சர்க்கு ஒன்னும் புரியில.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X