நிராகரிக்கப்பட்ட 'விசா'வுக்கு அமெரிக்காவில் மீண்டும் வாய்ப்பு

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன் : 'வெளிநாட்டினர் தங்களின் நிராகரிக்கப்பட்ட 'எச் - 1பி விசா' விண்ணப்பத்தை மீண்டும் தாக்கல் செய்யலாம்' என, அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு வல்லுனர்களை பணியமர்த்த, எச் - 1பி விசா வழங்கப்படுகிறது. இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2020ல் மின்னணு முறையில் எச் - 1பி விசா
H1B visa, re submit, application

வாஷிங்டன் : 'வெளிநாட்டினர் தங்களின் நிராகரிக்கப்பட்ட 'எச் - 1பி விசா' விண்ணப்பத்தை மீண்டும் தாக்கல் செய்யலாம்' என, அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு வல்லுனர்களை பணியமர்த்த, எச் - 1பி விசா வழங்கப்படுகிறது. இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2020ல் மின்னணு முறையில் எச் - 1பி விசா விண்ணப்பத்தை பதிவு செய்யும் முறை அமலுக்கு வந்தது.

கொரோனா காரணமாக, நடப்பாண்டுக்கான விண்ணப்பங்கள் போதிய அளவில் வரவில்லை. அதனால் 2020 ஆகஸ்டில், கையிருப்பில் இருந்த கூடுதல் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றின் பதிவு காலம், 2020 நவ., 16ம் தேதியுடன் முடிவடைந்தது. எனினும் பதிவின் துவக்க காலத்தில் விண்ணப்பித்து, அக்., 1ம் தேதிக்கு பின் விசா கோரிய விண்ணப்பங்கள், நிர்வாக ரீதியில் தள்ளுபடி செய்யப்பட்டன.


latest tamil news


இந்நிலையில், இந்த விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அதனால் கடந்த ஆண்டு விண்ணப்பித்து, எச் - 1பி விசா நிராகரிக்கப்பட்டோர், மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க தகவல் தொழில்நுட்ப துறையில் வல்லுனர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக,தள்ளுபடி செய்த எச் - 1பி விசா விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கர்ணன், கர்மபுரம் இன்னும் கேளுங்கள்.. 5 வருட H1 அப்புறம் green card.. அப்புறம் tax exemption.. அப்புறம் citizenship.. இதுபோக அவர்கள் வழங்கும் தரமான இலவச கல்வி lkg முதல் 2 வரை.. இலவச school bus.. இலவச பள்ளி உணவு.. இலவச புத்தகம்.. நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் இலவச college கல்வி.. full scholarship.. நல்ல தரமான வாழ்க்கை முறை.. America citizen. ஆன குழந்தைகள்.. ஆனால் நாங்கள் இன்னும் கேட்டுக்கொண்டே இருப்போம்.. ஒரு dollar கூட அங்கு இல்லாத மனிதர்களுக்கு குடுக்க மாட்டோம்.. சம்பாதிப்பதை அப்படியே இந்தியாவிற்கு அனுப்பி விட்டு அங்கு dollar store களிலும் Patel brothers லும் 50 cent ( paisa) க்கு இரண்டாம் தர பொருட்களை வாங்கி மகிழ்வோம்.. America வில் 80 இந்தியர்கள் வேலை உள்ள பிச்சைக்காரர் ஆகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. அமெரிக்க பிச்சைக்கார் நம்மவரை பார்த்து சிரிக்கிறான்.. இது நான் அங்கு கண்ட அனுபவம்..
Rate this:
Cancel
25-ஜூன்-202113:46:33 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் உண்மை தான் உன் மகளுக்கு இரண்டு மாதம் முன்பு L1 இல் இருந்து( ஐந்து வருடம் முடிந்து அவர்க கம்பெனி H1B விசாவிற்கு ( LOTTERY ) விண்ணப்பிக்கும் போது reject ஆகி விட்டது L1 ஐந்து வருடம் முடியப்போகிறது , H1B விசா கிடைத்தால் நலமே
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
25-ஜூன்-202106:12:03 IST Report Abuse
 Muruga Vel ஐந்து வருஷத்துக்கு மேல் H1B விசாவில் வேலை செய்பவர்களுக்கு க்ரீன் கார்ட் வழங்கி மனஉளைச்சல் இல்லாமல் வாழ ஆவண செய்ய வேண்டும்
Rate this:
Raj - ,
25-ஜூன்-202109:22:47 IST Report Abuse
RajWell Said 👍...
Rate this:
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
25-ஜூன்-202112:20:45 IST Report Abuse
Paramanஏன் இதோட நிறுத்திடீங்க?? தீயமூக்கா உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாத உதவி தொகையோட கிறீன் கார்டு இலவசமாக வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஒன்றிய அரசை உங்கள் டபுள் வாட்ச் மற்றும் உங்களின் டுமீளர் விழுதுகள் பிரமீளா ஜெயபாலு போன்றவர்கள் அங்கு உள்ளார்கள் அவர்கள் மூலம் கேளுங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X