பீஹார் ஆசிரியர் தேர்வில் மலையாள நடிகை தேர்ச்சி!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பீஹார் ஆசிரியர் தேர்வில் மலையாள நடிகை தேர்ச்சி!

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (26)
Share
பாட்னா: பீஹாரில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன் தேர்ச்சி பெற்றுள்ளது குறித்து வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2019ல் தகுதி தேர்வு நடந்தது. அதற்கான முடிவுகள் மார்ச்சில் வெளியிடப்பட்டன. சில தொழில்நுட்ப பிரச்னைகளால், மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தது.
Anupama Parameswaran, Bihar STET Exam, Merit List

பாட்னா: பீஹாரில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன் தேர்ச்சி பெற்றுள்ளது குறித்து வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பீஹாரில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2019ல் தகுதி தேர்வு நடந்தது. அதற்கான முடிவுகள் மார்ச்சில் வெளியிடப்பட்டன. சில தொழில்நுட்ப பிரச்னைகளால், மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தது. அவை சரி செய்யப்பட்டதாக அரசு இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


latest tamil news



இதில் ரிஷிகேஷ் குமார் என்ற மாணவர் உருது, சமஸ்கிருதம், அறிவியல் அடங்கிய, முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இணையதளத்தில் அந்த மாணவரின் பதிவு எண், மதிப்பெண் என, அனைத்து விபரங்களும் சரியாக உள்ளன. ஆனால், ரிஷிகேஷின் படத்துக்கு பதிலாக, மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இது சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

''பீஹாரில் எந்த நியமனமும் மோசடியில்லாமல் நிரப்பப்படுவதில்லை,'' என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X