10 மாதங்களில் 43 முறை கொரோனா தாக்கியும் உயிர் பிழைத்த பிரிட்டன் நபர்..!

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
பிரிஸ்டல்: பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனை அடுத்து வரும் ஜூலை மாதம் பிரிட்டனில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முழுவதுமாக நீக்க போரிஸ் ஜான்சன் அரசு முடிவெடுத்துள்ளது.இந்நிலையில் பிரிட்டனில் உள்ள ஓர் 72 வயது மூத்த குடிமகன் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் இவரது உடலில் அதிக நாட்கள்
UK Man, Covid Positive, 10 Straight Months

பிரிஸ்டல்: பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனை அடுத்து வரும் ஜூலை மாதம் பிரிட்டனில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முழுவதுமாக நீக்க போரிஸ் ஜான்சன் அரசு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் பிரிட்டனில் உள்ள ஓர் 72 வயது மூத்த குடிமகன் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் இவரது உடலில் அதிக நாட்கள் கொரோனா வைரஸ் தங்கியிருந்ததுதான். டேவ் ஸ்மித் என்கிற வாகன பயிற்சியாளரான இவர், இதுகுறித்து கூறினார். கடந்த 10 மாதங்களில் 43 முறை இவரது உடலில் கொரோனா பாசிட்டிவ் அறிகுறி தென்பட்டதாகவும் ஏழு முறை இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.


latest tamil news



தான் இறக்கப் போகிறோம் என்ற நினைப்பில் ஸ்மித் தனக்கு சவப்பெட்டியை தயார் செய்துவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இவர் இறக்கவில்லை. பத்து மாதங்களாக இவரது உடலில் கொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் தாக்கி வெளியேறியுள்ளது. இதன்மூலமாக உலகிலேயே அதிகமுறை வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட்ட நபர் என்கிற பெயரை டேவ் ஸ்மித் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
25-ஜூன்-202114:58:39 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam நம்மிலும் பலர் இப்படி இருக்கிறோம், சோதிதிருந்தல் நாமும் சாதனையாளராக மாறியிருப்போம்...
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
25-ஜூன்-202114:08:40 IST Report Abuse
vpurushothaman ஆயுசு " கெட்டி " என்பது இதுதானோ ?
Rate this:
Cancel
VELAN S - Chennai,இந்தியா
25-ஜூன்-202113:59:02 IST Report Abuse
VELAN S சளி காய்ச்சலுக்கு கொரோனா என்று பெயர் வைத்திருக்கிறோம் ., அப்படி பார்த்தா இன்னமும் ஒரு 1000 தடவை இவருக்கு கொரோனா வந்து வந்து போகும், இதெல்லாம் சகஜமப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X