பொது செய்தி

இந்தியா

'தடுப்பூசி சப்ளையில் ஒளிவு மறைவு இல்லை'; மத்திய அரசு

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: மாநிலங்களுக்கு தடுப்பூசி 'சப்ளை' வெளிப்படை யாக நடப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசு கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தடுப்பூசி சப்ளை செய்வதில் வெளிப்படை தன்மை இல்லை என, சில ஊடகங்களில்
CovidVaccine, Supply, Transparency, Centre, கொரோனா, கோவிட், தடுப்பூசி, சப்ளை, மத்திய அரசு

புதுடில்லி: மாநிலங்களுக்கு தடுப்பூசி 'சப்ளை' வெளிப்படை யாக நடப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தடுப்பூசி சப்ளை செய்வதில் வெளிப்படை தன்மை இல்லை என, சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது; இது முழுக்க முழுக்க ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இந்தியா, உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி, சர்வதேச நடைமுறைகளுடன் தேசிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


latest tamil news



ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் மக்கள் தொகை, கொரோனா பாதிப்பு, தேவைப்படும் தடுப்பூசி, தடுப்பூசியை பயன்படுத்தும் திறன், வீணாகும் தடுப்பூசி ஆகியவற்றின் அடிப்படையில் சீராக தடுப்பூசி வினியோகிக்கப்படுகிறது. அனைத்து செயல்பாடுகளும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகின்றன. அன்றாட தடுப்பூசி சப்ளை, பயன்பாடு, மீதமுள்ள தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து விபரங்களும், செய்தி நிறுவனம் வாயிலாக, அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அதனால் தடுப்பூசி சப்ளை வெளிப்படையாக இல்லை என்ற குற்றச்சாட்டை அமைச்சகம் மறுக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Valavan - Chennai,இந்தியா
25-ஜூன்-202114:11:36 IST Report Abuse
Valavan மத்திய சுகாதாரத்துறை சில நாட்களுக்கு முன் தடுப்பூசி தகல்வல்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை வந்ததாக நியூஸ் பார்த்தேன். இப்போது வெளிப்படை தன்மை என சொல்கின்றனர்
Rate this:
Cancel
velan - california,யூ.எஸ்.ஏ
25-ஜூன்-202113:31:27 IST Report Abuse
velan ஊசி போடுங்க ஊசி போடுங்க என்று பிரதமர் முதல் அனைவரும் சொல்கிறீர்கள் நானும் கோவாக்ஸின் இரண்டாவது டோஸுக்காக அலைகிறேன் கிடைத்த பாடில்லை இன்று கேட்டல் நாளை நாளை கேட்டால் மறுநாள் ஒன்றிய அரசு கோவாக்ஸின் ஊசியை தமிழகத்திற்கு அனுப்புகிறதா? கேட்டால் எல்லாம் சீக்ரட் என்கிறார்கள் மக்களாகிய நாம் எப்படி தெரிந்து கொள்வது? கோவின் செயலியை பார்த்தல் அதிலும் தெளிவு இல்லை. இந்த வகையில் நாம் ஊசி போட்டு வந்தால் மூணாவது அலை இல்லை முந்நூறாவது அலை கூட வரலாம் அப்பாவும் நாம் சொல்வோம் நாங்கள் எப்படி சாமர்த்தியமாக முந்நூறாவது அலையை கட்டுபடிதினோம் என்று ? அதற்குள் எதனை முறை உரு மாறும் வைரஸோ ? இந்த கோவக்சினை உலக சுகாதார நிறுவனம் அப்ப்ரூவ் செய்யணும் வேற ... என்ன கொடுமை சரவணன் என்ற முருகா
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூன்-202110:49:05 IST Report Abuse
Janarthanan இதே சிசிக்குலர் ஊடங்கங்கள் தான் டெல்லியில் ஒஸ்ய்ஜ்ன் தட்டுப்பாடு என்ற மாயை உருவாக்கி பீதி கிளப்பி கொண்டு இருந்தனர் ,ஆனால் இன்று உச்ச நீதிமன்றம் அமைத்து ஒஸ்ய்ஜ்ன் ஆடிட் குழு மூலம் டெல்லி கிட்ட தட்ட நான்கு மடங்கு ஒஸ்ய்ஜ்ன் அதிகமாக கோரி உள்ளதாக கண்டு பிடித்து உள்ளார்கள்? அதை 12 மாநிலங்களுக்கு உபயோக படுத்தி இருக்கலாமா? போர்ஜ்ரி வால் செய்த அட்டூளியம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X