எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தடியால் அடிக்கும் போலீஸ் மனநிலை தவறுதான்...

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சாமானிய மக்கள் மீது காவல் துறை கட்டவிழ்த்து விடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7க்கு முன் இருந்த மனோ நிலையில் இருந்து, காவல் துறை மாற வேண்டும். நடப்பது, தி.மு.க.,வின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.- தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி'எந்த ஆட்சி வந்தாலும், தடியால் அடிக்கும் போலீசார் மனோபாவம் தவறு தான்...' என, சொல்ல தோன்றும் வகையில், தி.மு.க.,
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தடியால் அடிக்கும் போலீஸ் மனநிலை தவறுதான்...

சாமானிய மக்கள் மீது காவல் துறை கட்டவிழ்த்து விடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7க்கு முன் இருந்த மனோ நிலையில் இருந்து, காவல் துறை மாற வேண்டும். நடப்பது, தி.மு.க.,வின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
- தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி


'எந்த ஆட்சி வந்தாலும், தடியால் அடிக்கும் போலீசார் மனோபாவம் தவறு தான்...' என, சொல்ல தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி அறிக்கை.



'மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த, மத்திய அரசிடம் முறையிடப்படும்' என, கவர்னர் உரையில் அரசு தெரிவித்துள்ளது; அது போதாது.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


'கவர்னர் உரையில் சொல்லாத பல விஷயங்கள் நடக்கும். எனவே, இந்த விவகாரத்தையும் அரசு அப்படி அணுகலாம். அது வரை அமைதியாக இருக்கலாமே...' என, சொல்ல தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.



முந்தைய ஆட்சியில், கூட்டுறவு துறை அமைச்சர் ராஜுவை, 'விஞ்ஞானி' என விமர்சித்தவர்கள், இப்போது, தி.மு.க., அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவியல் உண்மைக்கு மவுனம் சாதிப்பது ஏன்?
- தமிழக பா.ஜ., பொதுச் செயலர் சீனிவாசன்


'விஞ்ஞானிகள் பிற விஞ்ஞானிகளை பாராட்ட மாட்டார்கள் அல்லவா...' என, சொல்லி சிரிக்க தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் சீனிவாசன் அறிக்கை.



கொரோனா நோய் தொற்றை எதிர்த்து போராட, சாமானிய மக்களுக்கு தேவைப்படும் கிருமி நாசினிகள், பரிசோதனை கருவிகள் போன்றவற்றிற்கு, உலகில் மிக அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடு இந்தியா மட்டுமே.
- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


latest tamil news




'இருக்கலாம். நம் நாடு இன்னும் வளர்ந்து கொண்டு தானே இருக்குது. அதனால் கூடுதல் வரி போடுகின்றனரோ என்னவோ...' என, சொல்ல தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.



அனைவருக்குமான அரசு இதுவென காட்டுகிறது கவர்னர் உரை. புதிய அரசின் முன்னுரிமை, அதன் கொள்கை, உறுதி ஆகியவற்றை புலப்படுத்தும் வகையில், கவர்னர் உரை அமைந்துள்ளது. இது மிகுந்த மன நிறைவை அளிக்கிறது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்


'அறிக்கைக்கே இவ்வளவு நிம்மதி, திருப்தியா... ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின், இந்த அரசின் செயல்பாடுகளை வானளாவ பாராட்டுவீர்கள் போலிருக்கிறதே...' என, கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை.



ஒன்றியம் என்ற வார்த்தையால் தமிழகம் முன்னேறி விடுமா; பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை என்பதாகி விடுமா. நிர்வாக திறமை இல்லாததால், மக்களை திசை திருப்பி விடும் ஏற்பாடு தான் இது.
- தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர்


'கூட்டாட்சி மீது நம்பிக்கை இருப்பதாக முதல்வரே சொல்லி விட்டார். அதனால், இந்த விவகாரத்தை விட்டு விடலாம்...' என, சொல்ல தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
30-ஜூன்-202123:03:58 IST Report Abuse
madhavan rajan மகளிரணி தலைவி கூறுவது என்னவென்றால் மேமாதம் ஏழாம் தேதிக்கு பிறகு திமுக காரர்கள்தான் போலீசை அடங்குவார்கள் போலீஸ்காரர்கள் பிறரை அடக்கக்கூடாது என்பதுதான். இன்னொன்று இப்போது திமுக ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்று போலீஸ்காரர்களுக்கு இன்னும் தெரியவில்லை என்று இவர் நினைக்கிறார்போலும்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
27-ஜூன்-202104:44:41 IST Report Abuse
meenakshisundaram அப்போ போலீஸ் அவுட் போஸ்ட் ய தாக்குறதுவும் எரிக்கிறதுவும் காலித்தனம் செய்ரதுவும் ஒரு கட்சிக்கோ மக்களுக்கோ நல்லதா?ரஜினி சொன்னது போல போலீஸ் ஐயே தாக்கும் செயல் சரியா?
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-ஜூன்-202107:02:44 IST Report Abuse
RajanRajan போலீஸ் தடியால் அடிக்கும் என்பதை விட கோலால் அடிக்கும் என்பதல்லவோ இன்னும் தெளிவான தமிழ். தடி என்பது மரவேலைக்கு பயன் படும் எனும் பொருள் கொண்டது கோல் என்பது இன்னொரு கையாளும் ஆயுதம். கோல் கொண்டு தாக்கினன் என்பது தெளிவான செம்மொழி. எனவே தடி வேற கோல் வேற என்பதை கவிக்குயிலுக்கு தாழ்மையான சமர்ப்பணம். திராவிட ஊராட்சி ஓன்றிய தமிழ் வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X