பொது செய்தி

இந்தியா

ஆன்லைனில் மொபைல் போன்கள்; உலகளவில் இந்தியா முதலிடம்

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: உலகளவில், இந்தியாவில் தான், 'ஆன்லைன்' வாயிலாக மொபைல்போனை அதிகமானோர் வாங்கி உள்ளனர். மின்னணு வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகளை விட, இந்தியாவில் அதிகம் வாங்கப்பட்டுள்ளது.கடந்த 2020ம் ஆண்டில், இந்தியாவில் விற்பனை ஆன மொபைல் போன்களில், 45 சதவீத போன்கள், ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, 'கவுன்டர்பாயின்ட்
Online, Shopping, Mobiles, India

புதுடில்லி: உலகளவில், இந்தியாவில் தான், 'ஆன்லைன்' வாயிலாக மொபைல்போனை அதிகமானோர் வாங்கி உள்ளனர். மின்னணு வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகளை விட, இந்தியாவில் அதிகம் வாங்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில், இந்தியாவில் விற்பனை ஆன மொபைல் போன்களில், 45 சதவீத போன்கள், ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, 'கவுன்டர்பாயின்ட் ரிசர்ச்' நிறுவனம் தெரிவித்துள்ளது. நுகர்வோர் பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றத்தை, கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்தி இருக்கிறது. இதில், இந்தியாவில் தான் ஆன்லைன் வாயிலாக, அதிகளவிலான போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news



இந்தியாவில் ஆன்லைன் விற்பனையின் பங்கு, 45 சதவீதம் என்ற நிலையில், இதற்கு அடுத்த இடத்தில், பிரிட்டன் உள்ளது. இங்கு, 39 சதவீத போன்கள், ஆன்லைன் வாயிலாக விற்பனை ஆகியுள்ளன. இதற்கு அடுத்த இடத்தில், சீனா 34 சதவீத பங்களிப்புடன் உள்ளது. அமெரிக்காவில், 24 சதவீதம் மட்டுமே. மின்னணு பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டி பறக்கும் தென்கொரியாவில், ஆன்லைன் வாயிலாக வெறும், 16 சதவீதம் அளவுக்கே விற்பனை நடந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
25-ஜூன்-202113:44:03 IST Report Abuse
sahayadhas பரவா இல்ல, விற்ற தெல்லாம் made in India தான். ஜெய் ஸ்ரீராம்,
Rate this:
Cancel
sampath - tirupur,இந்தியா
25-ஜூன்-202113:41:53 IST Report Abuse
sampath MI ஆன்லைன் மோசடி உஷார்.. போனுக்கு பதிலாக டைல்ஸ் கல் - MI நிறுவனம் ஆன்லைன் போனுக்கு பதிலாக டைல்ஸ் கல் அனுப்பி மோசடி... வணக்கம்.நான் சம்பத், திருப்பூரிலிருந்து... கடந்த வாரம் MI வெப்சைட்டில் போன் ஆர்டர் செய்தேன். இந்த வாரம் டெலிவரி செய்தார்கள்.டெலிவரி செய்த பார்சல் பிரித்துப் பார்த்த பொழுது போனுக்கு பதிலாக டைல்ஸ் கல் இருந்தது. உடனே MI நிறுவனத்தை தொடர்பு கொண்டு பார்சலில் வந்த டைல்ஸ் கல்லை போட்டோ எடுத்து மெயில் மூலம் ஷேர் செய்தேன்.நான்கு நாட்கள் ஆகியது இதுவரை எந்த நடவடிக்கையும் இந்த நிறுவனம் எடுக்கவில்லை. மாறாக அந்த அதிகாரியிடம் இன்று தொடர்பு கொண்டு கேட்டபோது இதற்கு முன்னால் உள்ள புகார்களை முடித்த பிறகு உங்கள் புகாரை கவனிப்போம் ஒருவாரம் பொறுத்திருங்கள் என்று சொல்கிறார்கள் ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை ரூபாய் 14500 நான் முன்னதாகவே செலுத்தி விட்டேன் ஆனால் இதுவரை அதற்கு எந்த ஒரு திருப்பி செலுத்தவும் புதிய மொபைல் வழங்குவோம் MI நிறுவனம் எந்த ஒரு உத்தரவாதமும் கொடுக்கவில்லை இப்படிப்பட்ட ஆன்லைன் மோசடியை உலகிற்கு கொண்டு வரவே தங்கள் சேனலில் இதை வெளியிட அன்புடன் வேண்டுகிறேன்.மற்றும் எனக்கு ரூபாய் 14500 திரும்ப கிடைக்க வேண்டும் அதற்கு வழிவகை செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
25-ஜூன்-202119:03:58 IST Report Abuse
ஆப்புஎதுக்கு கவலை ப்ரோ? கல் வந்ததுல்ல. அதை வெச்சு வூடு கட்டுங்க. இல்லேன்னா மதுரை எய்ம்ஸ் கட்ட நன்கொடையா குடுங்க. இல்லே, டிஜிட்டல் இந்தியா பெதியவர் நிதிக்கு அனுப்பிருங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X