சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'முன்னாள் ஊழியர்கள் துணையுடன் திட்டமிட்டு கொள்ளை அடித்தோம்'

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை :சென்னையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மிஷின்களில் கோடிக்கணக்கில் சுருட்டிய கொள்ளையர்கள் வங்கியின் 'மாஜி' ஊழியர்களின் துணையுடன் நிதானமாக திட்டம் தீட்டி ஒவ்வொரு சம்பவத்தையும் அரங்கேற்றியதாக போலீசில் பிடிபட்ட கொள்ளையன் அமீர் 37 வாக்குமூலம் அளித்துள்ளான்.சென்னையில் வளசரவாக்கம் பெரியமேடு என 14க்கும் மேற்பட்ட எஸ்.பி.ஐ. வங்கியின் பணம் டிபாசிட் செய்யும்
'முன்னாள் ஊழியர்கள் துணையுடன் திட்டமிட்டு கொள்ளை அடித்தோம்'

சென்னை :சென்னையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மிஷின்களில் கோடிக்கணக்கில் சுருட்டிய கொள்ளையர்கள் வங்கியின் 'மாஜி' ஊழியர்களின் துணையுடன் நிதானமாக திட்டம் தீட்டி ஒவ்வொரு சம்பவத்தையும் அரங்கேற்றியதாக போலீசில் பிடிபட்ட கொள்ளையன் அமீர் 37 வாக்குமூலம் அளித்துள்ளான்.

சென்னையில் வளசரவாக்கம் பெரியமேடு என 14க்கும் மேற்பட்ட எஸ்.பி.ஐ. வங்கியின் பணம் டிபாசிட் செய்யும் வசதியுள்ள ஏ.டி.எம். மிஷின்களில் 1 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் துப்பு துலக்கி ஹரியானா மாநிலம் பல்லப்கர் பகுதியைச் சேர்ந்த அமீர் என்பவனை நேற்று முன் தினம் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


latest tamil news
இந்நிலையில் போலீசாரிடம் அமீர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: பல்லப்கர் நகரப் பகுதி என்றாலும் நாங்கள் வசிக்கும் இடம் கிராமம் போல இருக்கும். இளைஞர்கள் அனைவரும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்துள்ளோம். நான் தான் கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்தேன்.எங்கள் கூட்டாளிகள் சிலர் எஸ்.பி.ஐ. வங்கியில் தொழில் நுட்ப பிரிவில் வேலை பார்த்துள்ளனர். அவர்கள் பண மோசடியில் ஈடுபட்டதால் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். அப்போது தான் எஸ்.பி.ஐ. வங்கியின் 'டிபாசிட்' மிஷினில் கொள்ளையடிக்கும் தொழில் நுட்பம் அவர்களுக்கு தெரியவந்தது. அதுபற்றி எங்கள் கும்பலில் உள்ள அனைவருக்கும் ஆறு மாதம் பயிற்சி அளித்தோம். முதலில் வட மாநிலங்களில் கைவரிசை காட்டினோம். போலீசாரால் பிடிக்க முடியவில்லை. கொள்ளையடித்த பணத்தில் 30 சதவீதம் எனக்கு; 70 சதவீதம் மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவேன்.

சென்னையில் தொழில் நுட்ப கோளாறு உள்ள எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மிஷின் அதிகளவில் இருப்பது தெரியவந்தது. இதனால் ஐந்து குழுக்களாக 10 பேர் ரயிலில் வந்தோம். 'மொபைல் ஆப்' வாயிலாக அறை எடுத்து தங்கினோம். 'கூகுள் மேப்' உதவியுடன் எஸ்.பி.ஐ. வங்கி டிபாசிட் மிஷின்கள் உள்ள இடத்தை அடையாளம் கண்டோம். ஏற்கனவே சென்னையில் தங்கி இருந்த கூட்டாளிகளைத்தான் அழைத்து வந்தேன். இதனால் இடம் பற்றி அவர்களுக்கு குழப்பம் இல்லை. பின் இருவர் வீதம் பிரிந்து கொள்ளையடிப்பது; அனைவரும் கொள்ளைக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளக் கூடாது; விமானம் ரயில் மற்றும் வட மாநிலம் செல்லும் சரக்கு வாகனத்தில் பயணித்து எப்படியாவது ஊருக்கு தப்பிவிட வேண்டும். ஊருக்குச் சென்ற பின் பணத்தை பங்கு போடலாம் என்பது திட்டம்.

அதன்படி கோடிக்கணக்கில் கொள்ளையடித்தோம். நான்கு பேர் மட்டும் மொபைல் போனை பயன்படுத்தி 'ஆன்லைன்' வாயிலாக விமான 'டிக்கெட்' எடுத்து சொந்த ஊருக்கு தப்பினோம். விமானத்தில் குறைந்த பயணியரே இருந்தனர். இதனால் போலீசார் எளிதில் எங்களை அடையாளம் கண்டுவிட்டனர். நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு மொபைல் போனை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக அறை எடுத்து தங்கியது; விமான டிக்கெட் எடுத்தது. இது தான் எங்களை காட்டிக் கொடுத்து விட்டது. இவ்வாறு அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.


சென்னைக்கு அழைத்து வந்த போலீசார்ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் அமீர் நேற்று மாலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டான். அவனிடம் ராமாபுரம் ராயலா நகர் பகுதியில் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பின் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


கொள்ளையர் நகரம்ஏ.டி.எம். கொள்ளையர்கள் பிடிபட்ட பல்லப்கர் நகரம் குறித்து போலீசார் கூறியதாவது:
ஹரியானா மாநிலம் பல்லப்கர் கொள்ளையர் நகரம். அதிலும் சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிகம். ஒருவரை பிடித்தாலும் ஊரே கூடிவிடுகிறது. கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதியை ஊர் பொது காரியத்திற்கு பங்கு பிரித்து கொடுத்து விடுகின்றனர். இதனால் அந்த ஊர் மக்கள் ஒருவரையும் காட்டிக் கொடுப்பது இல்லை. ராஜஸ்தான் மாநிலம் பவாரியா கும்பலுக்கு நிகராக இந்த பல்லப்கர் கொள்ளையர்கள் உள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
25-ஜூன்-202122:49:41 IST Report Abuse
madhavan rajan நம்ம திருச்சியிலேயே ராம்ஜி நகர் என்று ஒரு பகுதி உண்டு. அவர்களும் இந்தியா முழுவதும் சென்று மோசடி செய்வதில் பலே கில்லாடிகள்.
Rate this:
Cancel
Pats - Coimbatore,இந்தியா
25-ஜூன்-202119:39:34 IST Report Abuse
Pats விஞ்ஞானப்பூர்வ திருடர்கள். அனைவரும் ஆளும்கட்சியில் உடனடியாக சேர தகுதி பெற்றவர்கள். எல்லோருக்கும் கட்சி உறுப்பினர் அட்டை பார்சல்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
25-ஜூன்-202118:32:17 IST Report Abuse
Rajagopal என்ன இது? தலைப்பை பார்த்ததும் நான் எதோ நம்ம சிதம்பரம்தான் பேசுகிறார் என்று நினைத்து விட்டேன்.
Rate this:
Baranitharan - Trichy,இந்தியா
30-ஜூன்-202109:42:18 IST Report Abuse
Baranitharanபாஸ் ராஜகோபால், நான் உங்களோட கருத்துக்கு ரசிகன் பாஸ். செம்ம போடு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X