பொது செய்தி

இந்தியா

ரூ.2,435 கோடி வங்கி கடன் மோசடி: 5 இடங்களில் சி.பி.ஐ., சோதனை

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: ரூ.2,435 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் கிராம்ப்டன் கிரீவ்ஸ் முன்னாள் தலைவர் கவுதம் தாபர் மீது சிபிஐ முறைகேடு வழக்குப் பதிவு செய்து மும்பை, டில்லி, குருகிராம் ஆகிய நகரங்களில் ஐந்து இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.ரூ.2,435 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, யெஸ் வங்கி உள்பட 11 வங்கிகள் சார்பில், பாரத ஸ்டேட் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் கிராம்ப்டன்

புதுடில்லி: ரூ.2,435 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் கிராம்ப்டன் கிரீவ்ஸ் முன்னாள் தலைவர் கவுதம் தாபர் மீது சிபிஐ முறைகேடு வழக்குப் பதிவு செய்து மும்பை, டில்லி, குருகிராம் ஆகிய நகரங்களில் ஐந்து இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.



latest tamil news


ரூ.2,435 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, யெஸ் வங்கி உள்பட 11 வங்கிகள் சார்பில், பாரத ஸ்டேட் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் கிராம்ப்டன் கிரீவ்ஸ் முன்னாள் தலைவர் கவுதம் தாபர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


latest tamil news


கடந்த 2015 முதல் 2019 வரையில் வங்கியில் பெற்ற பணத்தை, போலி நிறுவனங்கள் பெயரில் பணப் பரிவர்த்தனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கவுதம் தாபர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நேற்று, மும்பை, டில்லி, குருகிராம் ஆகிய நகரங்களில் ஐந்து இடங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியுள்ளது.

ஏற்கெனவே யெஸ் வங்கியில் ரூ.466 கோடி முறைகேடு தொடர்பாக கவுதம் தாபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஜூன்-202121:49:25 IST Report Abuse
தமிழவேல் இன்னைக்குத்தான் புகார் குடுத்தானுவொளா ? லண்டனுக்கு விமானம் போவுதா ?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-ஜூன்-202117:31:28 IST Report Abuse
J.V. Iyer எல்லா பணக்காரர்களும் ஆரம்பித்துவிட்டார்கள்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
25-ஜூன்-202116:07:25 IST Report Abuse
 N.Purushothaman வங்கிகள் எல்லாம் இதே மாதிரி ஆரம்பத்தில் இருந்தே உஷாராக இருந்திருந்தால் இதுபோன்ற அவலங்கள் ஏற்படுவதை தவிர்த்து இருக்கலாம் ....
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஜூன்-202122:01:37 IST Report Abuse
தமிழவேல் அவனுவோளையெல்லாம் வெளிநாட்டுக்கு தப்பிக்கிற அளவுக்கு கோட்டை விட்டாபோலாவா ஜி ? RBI கவர்னர், சொன்னபோதே அந்த வாராக்கடன் லிஸ்டை வெளியிட்டிருந்தா, ஏர்போர்ட்டிலயாவது மாட்டி இருப்பானுவோலே ? இப்பவும் மோசம் போயிடலை, இப்போவாவது வெளியிடுவாங்களா ஜி ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X