பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை சமாளிக்க மருத்துவ குழு தயார்

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், கருப்பு பூஞ்சை நோயின் அடுத்த அலை வந்தாலும், அதனை சமாளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளதாக, சிறப்பு மருத்துவ குழு கூறியுள்ளது.கருப்பு பூஞ்சை நோய் குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ குழு, தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இதன் பின்னர் அந்த குழுவினர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு
blackfungus, கறுப்பு பூஞ்சை, கருப்பு பூஞ்சை, மருத்துவ குழு

சென்னை: தமிழகத்தில், கருப்பு பூஞ்சை நோயின் அடுத்த அலை வந்தாலும், அதனை சமாளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளதாக, சிறப்பு மருத்துவ குழு கூறியுள்ளது.

கருப்பு பூஞ்சை நோய் குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ குழு, தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இதன் பின்னர் அந்த குழுவினர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறைந்து உள்ளது. இதுவரை 2,700 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 148 பேர் மரணமடைந்துள்ளனர். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவு. முதலில் மருந்து தட்டுப்பாடு இருந்தது. தற்போது இல்லை. சிகிச்சைக்கு மாற்று மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news


கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இனியும் வர உள்ளது. இதன் அடுத்த அலை வந்தாலும் அதை சமாளிக்கும் திறன் நம்மிடம் உள்ளது. இந்த நோய் பாதிப்பை சமாளிக்க மருத்துவ துறை தயாராக உள்ளது. முதலில், பாதிப்பு முற்றிய நிலையில் சிகிச்சைக்கு மக்கள் வந்தனர். தற்போது, ஆரம்ப நிலையிலேயே மக்கள் வருகின்றனர். பாதிப்பு உடனடியாக கண்டுபிடிக்கப்படுவதால், இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இந்த நோய் விவகாரத்தில் தமிழக அரசு வித்தியாசமான முறையை கையாள்கிறது. அரசின் முயற்சியால் நல்ல பலன் கிடைத்து உள்ளது. கருப்பு பூஞ்சை உருமாற்றம் அடையாது. உலகவில் இந்தியாவில் தான் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
25-ஜூன்-202115:32:23 IST Report Abuse
Mohan இந்தக் கருப்போட உங்க ஆட்டத்தயும் பார்க்கத்தானே போறோம்.
Rate this:
Cancel
R PURUSHOTHAMAN - Arni,இந்தியா
25-ஜூன்-202112:51:11 IST Report Abuse
R PURUSHOTHAMAN திரு ஸ்டாலின் ஆட்சியில் எல்லாமே சிறப்பாகத்தான் இருக்கும். - super....
Rate this:
RIN - ,
25-ஜூன்-202113:45:38 IST Report Abuse
RIN ha ha ha ho ho ho...
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) திரு ஸ்டாலின் ஆட்சியில் எல்லாமே சிறப்பாகத்தான் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X