தேவையை விட 4 மடங்கு கூடுதலாக ஆக்சிஜன் பெற்ற டில்லி

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடெல்லி: கோவிட் 2வது அலை பரவல் உச்சத்தில் இருந்தபோது, தேவையை விட டில்லிக்கு 4 மடங்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோவிட் 2வது அலை மிகத் தீவிரமாக பரவியது. அப்போது நாடு முழுவதும் பல இடங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. திடீரென ஆக்சிஜன் தேவை அதிகரித்ததால், மத்திய அரசு ஆக்சிஜன் உற்பத்தியை முடுக்கிவிட்டது.
Delhi, Oxygen, Inflated, Covid19, Peak, SC panel, டில்லி, ஆக்சிஜன், தேவை, அதிகம்

புதுடெல்லி: கோவிட் 2வது அலை பரவல் உச்சத்தில் இருந்தபோது, தேவையை விட டில்லிக்கு 4 மடங்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோவிட் 2வது அலை மிகத் தீவிரமாக பரவியது. அப்போது நாடு முழுவதும் பல இடங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. திடீரென ஆக்சிஜன் தேவை அதிகரித்ததால், மத்திய அரசு ஆக்சிஜன் உற்பத்தியை முடுக்கிவிட்டது. குறிப்பாக டில்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளிவந்தன. சில மருத்துவமனைகள் உச்சநீதிமன்றத்தை நாடியது. இதன்காரணமாக உச்சநீதிமன்றம் தலையிட்டு, டில்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை விரைந்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.


latest tamil news


இந்நிலையில், எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தலைமையில் டில்லி அரசு முதன்மை உள்துறை செயலர் பூபிந்தர் பல்லா, மேக்ஸ் ஹெல்த்கேர் இயக்குனர் சந்தீப் புத்திராஜா, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை செயலர் சுபோத் யாதவ் அடங்கிய ஆக்சிஜன் தணிக்கைக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இக்குழுவின் இடைக்கால அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதாவது, டில்லியில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு ஏற்ற அளவான 289 மெட்ரிக் டன்னை விட 4 மடங்கு கூடுதலாக 1,140 மெட்ரிக் டன் ஆக்சிஜனை டில்லி மருத்துவமனைகள் கூடுதலாக பெற்றுள்ளன.


latest tamil news


டில்லியில் ஆக்சிஜனின் சராசரி நுகர்வு 284 முதல் 372 மெட்ரிக் டன் வரை இருந்தது. டில்லி அரசாங்கத்தின் தகவல்கள் படி ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 10ம் தேதி வரையில் ஆக்சிஜன் நுகர்வு மொத்தம் 350 மெட்ரிக் டன்னை தாண்டவில்லை. டில்லிக்கு அதிகபடியான ஆக்சிஜன் வழங்கப்பட்டதால், ஆக்சிஜன் தேவைப்பட்ட மற்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டதாக அக்குழு சமர்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-ஜூன்-202117:55:53 IST Report Abuse
J.V. Iyer இதனால் பல ஆயிரம் உயிர்கள் மாண்டதால் இது ஒரு கிரிமினல் குற்றம். உடனே உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுப்பார்களா?
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
25-ஜூன்-202123:12:24 IST Report Abuse
madhavan rajanஅவர்கள் கட்சியை தடை செய்து அதன் தலைவர்கள் பத்து ஆண்டுகள் தேர்தலில் பங்கேற்கக்கூடாது என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்....
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
25-ஜூன்-202117:37:27 IST Report Abuse
M  Ramachandran உபயோக மற்ற குஞ்சிறுவால். பெரியதாக ஒப்பாரி வைத்தான்.கடைசியில் முக்காடு போட்டு கொண்டு அநத பஞ்சாபி குமபல்லுக்கு வேலை செய்கிறாற்போல் தெரிகிறது.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
25-ஜூன்-202115:22:02 IST Report Abuse
Suppan கெஜ்ரி கற்சியின் ஆட்கள்தான் ஆக்ஸிஜனைக் கள்ளச் சந்தையில் விற்றுக் கொண்டிருந்தார்கள். ஆக்ஸிஜன் ஆடிட் என்றதும் கெஜ்ரி பதுங்கியது எல்லோருக்கும் தெரியும். இப்பொழுது உண்மை வெளிவந்துவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X