அமெரிக்காவில் 12 மாடி கட்டடம் இடிந்தது: 99 பேரின் கதி என்ன?

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
மியாமி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி நகரில் உள்ள 12 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. அதில், 130குடியிருப்புகள் இருந்தன.இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.102 பேர் மீட்கப்பட்டனர். 99 பேரின் நிலை குறித்து
அமெரிக்கா, கட்டடம், us, america, building, collapse,

மியாமி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி நகரில் உள்ள 12 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. அதில், 130குடியிருப்புகள் இருந்தன.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.102 பேர் மீட்கப்பட்டனர். 99 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. அதில், பராகுவே அதிபரின் மனைவியின் சகோதரி, அவரது கணவர், 3 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர், கொலம்பியா, வெனிசுலாவை சேர்ந்த 6 பேர், அர்ஜென்டினாவை சேர்ந்த 8 பேர், உருகுவேவை சேர்ந்த 3 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. இடிந்து விழுந்த கட்டடம், கடந்த 1980ம் ஆண்டில் கட்டப்பட்டு உள்ளது. மேற்கூரையில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தன.


latest tamil newsபாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அளிக்க உத்தரவிட்டு உள்ள புளோரிடா மாகாண கவர்னர், மீட்பு பணிக்கும், அதற்கு உதவுவதற்காகவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க அவசர நிலையை பிறப்பிக்க அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உள்ளார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvakannan - Parlin,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202108:20:21 IST Report Abuse
Selvakannan இந்தியன் பேமிலி மிஸ்ஸிங் இந்த தி பில்டிங் சொல்லஸ்பி விஷால் படேல், ஹிஸ் வைப் அண்ட் 1 இயர் ஓல்ட் கிட
Rate this:
Cancel
26-ஜூன்-202107:14:06 IST Report Abuse
மனுநீதி நல்ல வேளை தமிழ்நாட்டில் திராவிட காண்ட்ராக்டர்கள் இதுபோல் உயரமான கட்டிடங்கள் கட்டவில்லை.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
25-ஜூன்-202118:23:13 IST Report Abuse
DVRR பராமரிப்பு பணிகள் என்றால் எங்கோ இடிக்கவேண்டியதை எங்கேயோ இடித்திருப்பார்கள் அதன் விளைவு தான் இது
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
29-ஜூன்-202106:09:38 IST Report Abuse
 Muruga Velஅமெரிக்காவில் பெரும்பாலும் மரம் உபயோகித்து வீடு கட்டுவதால் சேதாரம் அதிகம் இருக்காது ......
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
29-ஜூன்-202111:20:50 IST Report Abuse
 Muruga Velஎங்கோ இடிக்கவேண்டியதை எங்கேயோ இடித்திருப்பார்கள்... நெட்ல படம் பாக்கறதில்லயா .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X