அரசியல் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக்கில் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம், கோவில்களில் சுலபமில்லை: அமைச்சர் சேகர்பாபு

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (149)
Share
Advertisement
சென்னை: டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையத்தை
Tamilnadu, Minister, Sekarbabu, அமைச்சர், சேகர்பாபு

சென்னை: டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையத்தை அமைச்சர் சேகர்பாபு துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமாக உள்ள திருக்கோவில் மற்றும் இடங்களில் குறைகளை தெரிவிக்க குறைகேட்பு முகாம் துவங்கி உள்ளோம். அதற்காக தொலைபேசி எண் 044-28339999 வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் கணினியில் சேகரிக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய இருக்கிறேன்.


latest tamil news



கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. முற்றிலும் குறைந்த பிறகு, கோவில்கள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். திருக்கோவில் பக்தர்கள் வருவதற்கு தான் அனுமதி வழங்கவில்லை; பூசாரிகள் தினசரி பூஜை செய்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை. கோவிலில் நகை, சிலை திருட்டு, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுதொடர்பான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்.

சட்டசபைக் கூட்டத்தொடரில் கோவில்கள் புதுப்பிக்கும் பணி, தெப்பகுளங்களை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோவில் பணிகளுக்காக 100 கோடி ரூபாய் முதல்வர் ஒதுக்கியுள்ளார். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது. அனைத்து திருக்கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை கட்டாயமல்ல. விரும்பும் பக்தர்கள் தமிழில் அர்ச்சனை செய்து கொள்ளலாம். திருக்கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குப்படுத்துவது குறித்து விரைவில் நல்ல முடுவு எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (149)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூன்-202112:53:46 IST Report Abuse
Ganesh கோவிலுக்கு போனா கூட்டம். மதுக்கடைகளில் கூட்டம். தடுப்பூசிக்கு கூட்டம். மக்கள் என்ன நினைக்கிறார்கள். எதுவானாலும் முதலில் எனக்கு வேண்டும் என்று. அதனால் என்ன பயன் என்று தெரியாது ஆனால் கிடைக்கவில்லையெனில் தோல்வி என நினைக்கிறார். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் என்று உணராமல்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
26-ஜூன்-202109:56:52 IST Report Abuse
g.s,rajan மிகவும் அறிய கண்டுபிடிப்பு ,இதற்காக இவருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம் ஒன்றும் தவறில்லை ஜி.எஸ்,ராஜன் சென்னை
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-ஜூன்-202108:54:24 IST Report Abuse
RajanRajan டாஸ்மாக் வருமானம் பெருசா கோவில் வருமானம் பெருசான்னு அமைச்சர் அரட்டை அரங்கம் நடத்துறாரோ? டாஸ்மாக் டோக்கன் மாதிரி கோவிலுக்கு போக டோக்கன் கொடுத்து உள்ள போனவங்க அத்தனினி பேரும் வெளியே வந்ததும் அடுத்து டோக்கனை கொடுங்க. அதெப்படியாப்பா தள்ளாடுறவனை கன்றோல் பண்ணுவோம் தெளிவா இருக்கிறவனை இம்ஸிப்போம்ன்னா அது எப்படி.தலைவா.??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X