பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று: இருவர் நலம்

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் நலமடைந்த நிலையில், மேலும் 3 பேருக்கு அந்த வகை வைரஸ் தொற்று உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அதில், ஒருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார்.சென்னையில் நிருபர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ்
தமிழகம், டெல்டா பிளஸ், மா.சுப்பிரமணியன், சுகாதார அமைச்சர்,

சென்னை: தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் நலமடைந்த நிலையில், மேலும் 3 பேருக்கு அந்த வகை வைரஸ் தொற்று உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. அதில், ஒருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் முடிவுகள் நேற்று இரவு வந்தது. சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதிபடுத்தப்பட்டது.


latest tamil news


அதில், மதுரையை சேர்ந்தவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், நேற்று இரவு முடிவு வந்தது. மற்ற இருவர் நலமுடன் உள்ளனர். தமிழகத்தில், டெல்டா பிளஸ் வைரஸ் பரிசோதனை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. சென்னையில், புதிதாக பகுப்பாய்வு மையம் அமைக்கும் திட்டம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூன்-202117:11:29 IST Report Abuse
ஆரூர் ரங் டெல்டா னாலே ஸ்டாலினின் மீத்தேன் திட்டம்தான்😇 நினைவுக்கு வருகிறது
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூன்-202116:52:25 IST Report Abuse
oce மனித உடலுக்குள் இருதயம் நுரையீரல் கல்லீரல் கணையம் சிறுகுடல் பெருங்குடல் ஆசன வாய் எனபல உறுப்புகள் உள்ளன. சீனாக்காரன் முதலில் அவுத்து வுட்டது குரோனா. அதன் வேலை நுரையீரலை அடைப்பது. அதன் குட்டிகளான டெல்ட்டா அதன் வேலை ரத்த சுத்தத்தை கெடுப்பது. அதற்கடுத்த குட்டியான ஆல்பா.அதன் வேலை இருதய ஓட்டத்தை பதம் பாரப்பது. அற்கடுத்த குட்டியான பீட்டா.அதன் வேலை கணையத்தை ஒரு கை பார்ப்பது. அதற்கும் அடுத்த கடைக்குட்டியான காமா சிறுகுடலை அடைப்பது. உலகில் மொத்தம் ஐந்து அலைகளை சீனாக்காரன் ஒதுக்கி இருக்கிறான். அவற்றில் குரோனா டெல்ட்டா இரு அலைகள் தாண்டி இப்போ டெல்ட்டா பிளஸ் என்ற இரண்டாவது அலையின் இரண்டாம் துணைப் பகுதி அலை தோன்ற தொடங்கியுள்ளது. மூன்றாவது ஆல்பா நான்காவது பீட்டா ஐந்தாவது காமா அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக அலைகளை பரப்பும். இறுதியில் உலகம் கோவிந்த நாம சங்கீர்த்தனம்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஜூன்-202116:40:42 IST Report Abuse
தமிழவேல் 3 ன்னு சொன்னா 300 ன்னு அர்த்தம். கோட்டை விட்டுடாதீங்கடா. கும்பலையே தனிமைப் படுத்த பாருங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X