இஸ்ரேலில் பரவும் டெல்டா வைரஸ்: தடுப்பூசி போட்டவர்களும் பாதிப்பு

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஜெருசலேம்: 'இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதற்கு டெல்டா வைரஸ் தான் காரணம்' என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கோவிட் வைரஸ் அதிக தொற்றுத் தன்மை கொண்டதாக உள்ளது. இந்த வைரசால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில்

ஜெருசலேம்: 'இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதற்கு டெல்டா வைரஸ் தான் காரணம்' என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கோவிட் வைரஸ் அதிக தொற்றுத் தன்மை கொண்டதாக உள்ளது. இந்த வைரசால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் அதிக அளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். 'டெல்டா வைரஸ் இதுவரை 85 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் பரவுதலில் இதே வேகம் நீடித்தால் உலகம் பெரும் பாதிப்பை சந்திக்கும்' என, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news



இந்நிலையில், இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இஸ்ரேலில் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 6,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தொற்று பாதிப்பு கடந்த மாதத்தில் வெகுவாகக் குறைந்து இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


latest tamil news



'தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவிட் பரவலுக்கு இங்கு புதிதாகப் பரவி வரும், டெல்டா வைரசே காரணம்' என, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், தொடர்ந்து பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
25-ஜூன்-202120:29:41 IST Report Abuse
Subramaniyam Veeranathan சும்மா சொல்லக்கூடாது சீனாகாரன் இஸ்ரலிலும் திரும்பவும் விளையாடுகிறான் என்று. மூன்றாம் உலகபோர் இன்னும் தொடர்கிறர்து
Rate this:
Cancel
25-ஜூன்-202118:07:46 IST Report Abuse
ஆப்பு யாரு கண்டா? அங்கேயும் மருந்துக்கு பதில் தண்ணீரையே தடுப்பூசியா போட்டுட்டாங்களோ என்னவோ?
Rate this:
Cancel
25-ஜூன்-202118:07:16 IST Report Abuse
A.Balasbramanian இந்த இஸ்ரேல் நாட்டின் செய்தியை தமிழ்நாட்டு மக்கள் பார்த்தால் மேலும் கோவிட் 19 தடுப்பு ஊசி செலுத்துவதில் சுணக்கம் ஏற்படும் ,,கவனம்,நன்றி,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X