44 ஆண்டுகளில் முதல் முறையாக பிரிட்டனில் பிறப்பை விட இறப்புகள் அதிகம்!

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
லண்டன்: பிரிட்டனில் 1976-க்கு பிறகு கடந்த 2020-ல் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகியுள்ளது. இதற்கு கொரோனா பெருந்தொற்று காரணம் என்கின்றனர்.2020-ல் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் 683,180 குழந்தைகள் பிறந்துள்ளன. 49.5 விநாடிக்கு ஒரு குழந்தை என்ற ரீதியில் பிறந்துள்ளது. அதே சமயம் 689,708 பேர் அதாவது பிறப்பை விட 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர்
பிரிட்டன், பிறப்பு, இறப்பு, அதிகம்

லண்டன்: பிரிட்டனில் 1976-க்கு பிறகு கடந்த 2020-ல் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகியுள்ளது. இதற்கு கொரோனா பெருந்தொற்று காரணம் என்கின்றனர்.

2020-ல் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் 683,180 குழந்தைகள் பிறந்துள்ளன. 49.5 விநாடிக்கு ஒரு குழந்தை என்ற ரீதியில் பிறந்துள்ளது. அதே சமயம் 689,708 பேர் அதாவது பிறப்பை விட 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். இத்தகவலை பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 1976-க்கு பிறகு தற்போது தான் பிறப்பை விட இறப்பு விகிதம் அதிகத்திருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக பிரிட்டனில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. கோவிடிற்கு முன்பே பிறப்பு விகிதங்கள் 1930-ல் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட காலத்தை விட குறைவாக இருந்தது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று இறப்பு எண்ணிக்கையை அதிகரித்ததால் இவ்வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் மக்கள்தொகை மாற்றத்திற்கான மையம், 'கோவிட்டிற்கு முந்தைய காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது அடுத்த 3 ஆண்டுகளும் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரியும்' என கணித்துள்ளது.


latest tamil newsமக்கள் தொகை நிலைத்தன்மையை பராமரிக்க பிரிட்டனில் ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தை என்ற அளவில் பிறப்பு விகிதம் தேவை. அதாவது பத்து பெண்களுக்கு 21 குழந்தைகள் தேவை. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஏற்கனவே இது கடந்த ஆண்டு 1.6 ஆகக் குறைந்துவிட்டது. 2023-ல் 1.45 ஆகக் குறையும் என்கின்றனர். மனச்சோர்வு, கஷ்டமான சூழல், பாதுகாப்பின்மை மற்றும் பதட்டம் ஆகியவை குழந்தை பிறப்பு விகிதம் குறைவதற்கு காரணம் என்கின்றனர். மேலும் சம்பாதிப்பதற்கு குழந்தை தடையாக இருக்கும் என்ற மனநிலையும் அங்கு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.V. Prakash - Bhavani,இந்தியா
25-ஜூன்-202117:19:05 IST Report Abuse
B.V. Prakash உலக அழிவின் ஆரம்பம். மனிதனின் பேராசையும் மற்றவர்களை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணமுமே காரணம்.
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
25-ஜூன்-202115:18:55 IST Report Abuse
mohan ஒட்டு மொத உலக சமுதாயம், அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது....
Rate this:
MANI DELHI - Delhi,இந்தியா
25-ஜூன்-202118:56:50 IST Report Abuse
MANI DELHIஇதனை சற்று வேறுவிதமாக பார்க்கலாம். ஒரே இனமக்கள் . கிருத்துவர்கள். இந்தியாவைப்போல பன்முகத்தன்மை கலாச்சாரம் இல்லை. அவர்களுக்கு தெரிந்தது இன்று சம்பாதித்து இன்றே செலவு செய்து மகிழ்ந்து இருப்பர். திருமணம் என்ற பந்தத்தில் பெரும்பான்மையானவர்கள் நம்பிக்கை அற்றவர்கள். துணிமாற்றிக்கொள்ளும் தோரணையில் இரு பாலரும் தங்கள் உறவு முறைகளை மாற்றிக்கொள்வர். அப்படி பட்ட உறவுகளில் பிறந்த குழந்தைகளுக்கு முகவரி என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழ்ந்த உறவில் பிறந்தவர் என்பதை தவிர ஏதுமில்லை. அப்படி பிறந்த குழந்தைகளுக்கும் அவர்களின் பிறப்பிற்கு காரணமானவர்களுக்கும் இடையே எந்த உறவுமுறை கடமைகளும் இல்லை. இங்கேயே பிறப்பு விகிதம் குறைந்து விட்டது என்றால் உண்மையில் கவனிக்கப்பட வேண்டிய கூற்று. இந்தியாவில் கேவலம் அரசியல் ஆதாயத்துக்கு சமூகங்களை அழித்து இந்தியமக்களுக்கான பொது சட்டம் என்று இல்லாமல் கண்போன போக்கில் வாழும் நாம் நமக்கு வகுத்த வாழ்க்கை முறையை அழித்துவிட்டோம். இன்று இந்தியர்களின் பிறப்பு விகிதம் என்பதை விட மதம் சார்ந்த பிறப்பு அதிகமாக காரணமே நமது கேவலமான அரசியல்வாதிகளின் சுயநலம் சார்ந்த சட்டங்கள். மேலும் மேற்சொன்ன காலாச்சார சீரழிவுகளை நாமே நமது வாழ்க்கையில் திணித்துக்கொண்டு நம் அடையாளங்களை இழந்து கொண்டு இருக்கிறோம். இந்தியா சனாதன தர்ம வாழ்வாதாரத்தில் கட்டமைக்கப்பட்டது. அதை நாம் மதங்களின் மூலம் மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளை வைத்து மாற்றிக்கொண்டால் நாமும் இந்த நிலைமைக்கு தள்ளப்படுவோம். ஒன்று நிச்சயம் இந்த நிலை இந்தியர்களுக்கு வருகிறதோ இல்லையோ ஹிந்துக்களின் வாழ்க்கை முறையான சனாதன தர்ம மக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பாகிவிடும். ஒருமனிதனின் பிறப்பு இறப்பும் இயற்கையின் நியதி. பொருளாதாரத்திற்காக நம்மை குறைத்து உறவுகளில்லாத வாழ்க்கைக்கு நாம் தள்ளப்பட்டுவிட கூடாது. நமது சனாதன தர்ம வாழ்க்கைமுறை நம்மை காக்கும் என்று நம்புவோம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X