பொது செய்தி

இந்தியா

காவிரியில் 33.19 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 33.19 டிஎம்சி தண்ணீரை காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் நடந்தது. இதில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், கர்நாடக அரசு உரிய முறையில் காவிரி நீரை வழங்கவில்லை என தமிழக அரசு
cauvery, water, karnataka, காவிரி, நதிநீர் மேலாண்மை ஆணையம், கர்நாடகா, உத்தரவு, தமிழகம், மேகதாது

புதுடில்லி: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 33.19 டிஎம்சி தண்ணீரை காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் நடந்தது. இதில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், கர்நாடக அரசு உரிய முறையில் காவிரி நீரை வழங்கவில்லை என தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


latest tamil news


இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான 33.19 டி.எம்.சி., தண்ணீரை காவிரியில் திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19 டி.எம்.சி., மற்றும் ஜூலை மாதம் வழங்க வேண்டிய 24 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூன்-202118:54:18 IST Report Abuse
kulandhai Kannan அதே போல், மேட்டூர் அணையிலிருந்தும் எவ்வளவு நீர் திறக்கவேண்டும் என்றும் உத்திரவு இடவேண்டும்.
Rate this:
Cancel
25-ஜூன்-202118:05:48 IST Report Abuse
ஆப்பு ஏற்கனவே முதல்வர் நாற்காலி ஆட்டம் காண்டுக்கிட்டிருக்கும் எடியூரப்பாவுக்கு இது அல்வா சாப்புடற மாதிரி. தண்ணி தராம முரண்டு பிடிச்சு தியாகி ஆயிடுவாரு.
Rate this:
Cancel
Na -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூன்-202117:21:07 IST Report Abuse
Na Stalin win
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X