காவிரியில் 33.19 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காவிரியில் 33.19 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (9)
Share
புதுடில்லி: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 33.19 டிஎம்சி தண்ணீரை காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் நடந்தது. இதில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், கர்நாடக அரசு உரிய முறையில் காவிரி நீரை வழங்கவில்லை என தமிழக அரசு
cauvery, water, karnataka, காவிரி, நதிநீர் மேலாண்மை ஆணையம், கர்நாடகா, உத்தரவு, தமிழகம், மேகதாது

புதுடில்லி: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 33.19 டிஎம்சி தண்ணீரை காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் நடந்தது. இதில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், கர்நாடக அரசு உரிய முறையில் காவிரி நீரை வழங்கவில்லை என தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


latest tamil news


இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான 33.19 டி.எம்.சி., தண்ணீரை காவிரியில் திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19 டி.எம்.சி., மற்றும் ஜூலை மாதம் வழங்க வேண்டிய 24 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X