ஆக்சிஜனை அளவுக்கு அதிகமா அமுக்கியதா டில்லி அரசு : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்த சமயத்தில் தேவையை விட டில்லிக்கு 4 மடங்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.கடந்தாண்டை விட இந்தாண்டு கொரோனா பாதிப்பு அதி தீவிரமாக இருந்தது. ஏப்ரல் மாதங்களில் நாட்டின் பல இடங்களில் ஆக்சிஜன் தேவையும், பற்றாக்குறையும் ஏற்பட்டது. குறிப்பாக டில்லியில் பல
ArrestKejriwal, SupremeCourt, Criminal, ArrestSisodia,

புதுடில்லி : கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்த சமயத்தில் தேவையை விட டில்லிக்கு 4 மடங்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

கடந்தாண்டை விட இந்தாண்டு கொரோனா பாதிப்பு அதி தீவிரமாக இருந்தது. ஏப்ரல் மாதங்களில் நாட்டின் பல இடங்களில் ஆக்சிஜன் தேவையும், பற்றாக்குறையும் ஏற்பட்டது. குறிப்பாக டில்லியில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளிவந்தன. மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்நிலையில் சில மருத்துவமனைகள் உச்சநீதிமன்றத்தை நாடியதால் டில்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை விரைந்து வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுஒருபுறம் இருக்க ஆக்சிஜன் தணிக்கைக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இக்குழுவின் இடைக்கால அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது, டில்லியில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு ஏற்ற அளவான 289 மெட்ரிக் டன்னை விட 4 மடங்கு கூடுதலாக 1,140 மெட்ரிக் டன் ஆக்சிஜனை டில்லி மருத்துவமனைகள் கூடுதலாக பெற்றுள்ளன. டில்லியில் ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 10ம் தேதி வரையில் ஆக்சிஜன் நுகர்வு மொத்தம் 350 மெட்ரிக் டன்னை தாண்டவில்லை. ஆனால் டில்லிக்கு அதிகபடியான ஆக்சிஜன் வழங்கப்பட்டதால், ஆக்சிஜன் தேவைப்பட்ட மற்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டதாக அக்குழு சமர்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்த விவகாரம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பல மாநிலங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் திண்டாடி கொண்டிருக்க ஒரு மாநிலத்திற்கு மட்டும் இப்படி தேவைக்கு அதிகமான ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டது கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது. இது டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நிர்வாக சீர்கேட்டை பிரதிபலிப்பதாக கூறி பலரும் அவரை டுவிட்டரில் வசை பாடி வருகின்றனர். இன்றைக்கு டுவிட்டரில் டில்லிக்கு மிதமிஞ்சிய ஆக்சிஜன் வழங்கல் விஷயம் தான் டிரெண்ட் ஆக உள்ளது. #ArrestKejriwal, #SupremeCourt, #Criminal, #ArrestSisodia உள்ளிட்ட ஹேஷ்டாக்குகளில் டில்லி அரசையும், முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட அவரது அமைச்சர்களையும் வசை பாடி வருகின்றனர். இந்த ஹேஷ்டாக்குகளில் பதிவான சில கருத்துக்கள்....

* கொரோனா எனும் கொடி நோயால் மக்கள் நிலை குலைந்து போன நிலையில் ஆக்சிஜன் இல்லை என மக்கள் மத்தியில் மேலும் பதட்டத்தை உண்டு பண்ணிய அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய வேண்டும்.

* தேவைக்கு அதிகமாக எதற்காக டில்லி அரசு இவ்வளவு ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வைத்தது. பல மாநிலங்களில் ஆச்சிஜன் கிடைக்காமல் எத்தனை பேர் இறந்து போனார்கள். சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தை தீர ஆராய்ந்து முதல்வர் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அவரை கைது செய்ய வேண்டும்.


latest tamil news* விளம்பரங்களுக்கு கோடி கோடியாய் செலவழித்துவிட்டு, ஆக்சிஜன் இல்லை என பொய் பரப்புரை செய்து மக்களை ஏமாற்றி, பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டு நிலவ காரணமாகி, பல உயிர்களை இழக்க காரணமான டில்லி முதல்வரை கைது செய்தாலும் தவறில்லை.

* டில்லி மட்டுமல்ல பல மாநிலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் டில்லி முதல்வரும், அவரது அமைச்சரவை மற்றும் அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

* பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக அன்னா ஹசாரேயையும், நாட்டு மக்களையும் முதலில் ஏமாற்றினார் கெஜ்ரிவால். ஆக்சிஜன் தட்டுப்பாடு என பொய்யான விஷயத்தை பரப்பி ஆயிரகணக்கான பேர் இறக்க காரணமாகி உள்ளார். சொந்த நாட்டில் இருந்து கொண்டே நாட்டை அழிக்கும் கொடிய புற்றுநோய் கெஜ்ரிவால்.

இப்படி பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-ஜூன்-202107:11:07 IST Report Abuse
மனுநீதி நீதிமன்றங்கள் உணர்ச்சிவசப்பட்ட ஆரம்பித்ததன் விளைவு தான் இது. அதுபோல் இன்னும் ஒரு முறை உணர்ச்சிவசப்பட்டு இவரை தகுதி நீக்கம் செய்வீர்களா கணம் நீதிபதி?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
26-ஜூன்-202105:58:48 IST Report Abuse
meenakshisundaram இந்த மாதிரி முதலமைச்சர்கள் திஹார் அனுப்பிட்டாலேயே உண்மை ஜன நாயகம் கிடைக்கும் ,ஏன் உச்ச நீதி மன்றம் தானாகவே அதை செய்யக்கூடாது? நீதி மன்றத்தையே திசை திருப்பிய கயவர்கல் ஏன் தண்டிக்கப்படக்கூடாது?
Rate this:
Cancel
sudharman - chennai,இந்தியா
25-ஜூன்-202122:51:24 IST Report Abuse
sudharman சொன்னதை சரியாக படியுங்கள். படுக்கைகளை விட அதிகம் என்று கூறி உள்ளது. எத்தனை படுக்கைகள் உள்ளதோ அந்த அளவுக்கு தான் நோயாளிகள் இருந்தார்களா. தொடர்ச்சியா பிணங்கள் எறிந்த போதும் மக்கள் சிலிண்டர்களுக்கு பறந்தது மறந்து விட்டீர்களா. தவிர பாஜக ஆட்சியில் சரியான தகவல்களை தான் தருகிறார்களா.. சிலிண்டர் பயனர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க கூடாதுன்ன சொன்னதை மறந்து விட்டிர்களயோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X