டுவிட்டர் கணக்கு முடக்கம்: மத்திய அமைச்சர் புகார்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டுவிட்டர் கணக்கு முடக்கம்: மத்திய அமைச்சர் புகார்

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 25, 2021 | கருத்துகள் (21)
Share
புதுடில்லி: தனது டுவிட்டர் கணக்கு, ஒரு மணி நேரம் முடக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் புதிய தொழில்நுட்ப சட்டம் கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்திற்கு டுவிட்டர் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததுடன், விதிமுறைகளை அமல்படுத்தவில்லை. இதனையடுத்து, இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால், விளைவுகளை

புதுடில்லி: தனது டுவிட்டர் கணக்கு, ஒரு மணி நேரம் முடக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.



latest tamil news


சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் புதிய தொழில்நுட்ப சட்டம் கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்திற்கு டுவிட்டர் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததுடன், விதிமுறைகளை அமல்படுத்தவில்லை. இதனையடுத்து, இந்திய சட்டங்களை பின்பற்றாவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: கடந்த ஒரு மணி நேரமாக, அமெரிக்க டிஜிட்டல் பதிப்புரிமை சட்டங்களை மீறியதாக கூறி எனது டுவிட்டர் கணக்கை, அந்த நிறுவனம் முடக்கியிருந்தது. பின்னர், எனது கணக்கை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்கு எதிரானது. எனது கணக்கை முடக்குவதற்கு முன்னர் அவர்கள், முன்னறிவிப்பு கொடுக்க தவறிவிட்டனர் . இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


latest tamil news



மேலும், கணக்கு முடக்கப்பட்டதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளார்.


latest tamil news




தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், டுவிட்டர் நிறுவனம் தனது சொந்த சட்டதிட்டங்கள் படியே செயல்படுகிறது. இது அந்த நிறுவனத்தின் தன்னிச்சையான நடவடிக்கை ஆகும். இந்திய சட்டங்களை அந்த நிறுவனம் மதிக்க வேண்டும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.


latest tamil news



இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், புகார் வந்ததை தொடர்ந்தே, ரவி சங்கர் பிரசாத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக விளக்கமளித்து உள்ளது. அதன்பின்னர், ஒருமணிநேரத்திற்கு பிறகு அவரது டுவிட்டர் கணக்கு மீண்டும் இயங்கியது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X